search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pushkar Singh Dhami"

    • இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
    • ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,

    ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி அழைத்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியமான பதவி வகிக்கிறார். கடவுள் அவருக்கு ஞானத்தை தரட்டும்.

    கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம். இந்த ஆண்டும் கூட்டம் நடத்துவோம்.

    கடந்த ஆண்டு 4 கோடிக்கும் அதிக சிவ பக்தர்கள் இங்கு வந்தனர். இந்த ஆண்டு வரவிருக்கும் அனைவரையும் வரவேற்க நல்ல ஏற்பாடுகளை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்து வருகிறார்.
    • முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    டேராடூன்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்தும் வருகிறார்.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஹரித்வார், தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ரிஷிகேஷில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பேரணி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார். அதன்பின் பேரணியில் உரையாற்றினார்.

    ஏப்ரல் 2-ம் தேதி உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு உத்தரகாண்டில் அவர் நடத்தும் இரண்டாவது பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 37 உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை வருமாறு:-

    1. தாய்

    2. வளர்ப்புத்தாய்

    3. தாயாரின் தாய்

    4. வளர்ப்பு பாட்டி

    5. பூட்டி

    6. வளர்ப்பு பாட்டியின் தாயார்

    7. அம்மாவுடைய அப்பாவின் தாயார்

    8. தந்தையின் தாயார்

    9. அப்பா, அம்மா வழி பாட்டி

    10. அப்பா, அப்பா வழி பாட்டி

    11. மகள்

    12. மகனின் விதவை மனைவி

    13. மகளின் மகள் (பேத்தி)

    14. மகளுடைய மகனின் விதவை மனைவி

    15. மகனின் மகள்

    16. மகனுடைய மகனின் விதவை மனைவி

    17. மகளுடைய மகளின் மகள்

    18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    19. மகளுடைய மகனின் மகள்

    20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி

    21. மகளுடைய மகளின் மகள்

    22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    23. மகளுடைய மகனின் மகள்

    24. சகோதரி

    25. சகோதரியின் மகள்

    26. சசோதரனின் மகள்

    27. அம்மாவின் சகோதரி

    28. அப்பாவின் சகோதரி

    29. அப்பாவின் சகோதரர் மகள்

    30. தந்தையின் சகோதரியின் மகள்

    31. தாயாரின் சகோதரியின் மகள்

    32. தாயாரின் சகோதரியின் மகள்

    (Widow- விதவை, என்பது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியையும் உள்ளடக்கும்)

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது
    • பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்தது

    இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது சட்டமாக மாறும் போது இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் எனும் பெயர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கிடைக்கும்.

    சட்டசபை தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது.

    இக்குழு அறித்த அறிக்கையின் பேரில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது.

    இன்று இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் "ஜெய் ஸ்ரீராம்" என உற்சாகமாக கோஷம் போட்டனர்.

    குடிமக்களுக்கான தனிநபர் சட்டம் மதம் மற்றும் பாலினம் கடந்து ஒரே தளத்தில் அமையும் வகையில் இருக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி சொத்துக்களில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமை, தத்து எடுக்கும் குழந்தைக்கும் சொத்துக்களில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமண தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    மசோதா தாக்கலான நிலையில் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 02:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவு அடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.


    • மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார்.
    • புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார். அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

    போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி எடுத்துக் கூறினார்.

    • உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி நடந்து வருகிறது.
    • 900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    இதற்கிடையே, நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும்வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழு தெரிவித்தது. இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அதிகாரி பாஸ்கர் குல்பே கூறியதாவது:

    சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர். சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம். இன்றிரவு அல்லது அதிகபட்சம் நாளை அதிகாலை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

    900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 67 மீட்டர் நீளத்தில் 39 மீட்டருக்கு தோண்டும் பணி முடிந்துள்ளது.

    18 மீட்டர் மட்டுமே இன்னும் தோண்ட உள்ளதால் இன்றிரவுக்குள் மீட்புப்பணி நிறைவடையும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் விசாரித்து அறிந்தார்.

    ×