என் மலர்
நீங்கள் தேடியது "Pushpa 2 The Rule"
- 12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார்.
- அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை.
படங்களில் பிரபலமாகும் பாடல்கள், காட்சிகளைப் போல நடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள புஷ்பா-2 படத்தில், கங்கம்மா தல்லி காட்சி இடம்பெற்றிருக்கும். ஆந்திரா கோவிலில் ஆண்கள் பெண் வேடமணிந்து வழிபாடு செய்யும் திருவிழா சம்பந்தமானது அந்த காட்சி.
கேரளாவில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அந்த புஷ்பா பட காட்சி போல வேடமணிந்து, உற்சாகமாக நடனமாடி மற்ற ரசிகர்களை கவர்ந்தார். அவர் முகத்தில் சிவப்பு வண்ணமும், உடம்பில் நீல வண்ணமும் பூசி, படத்தில் அல்லு அர்ஜூன் தோன்றும் தோற்றத்தில் இருந்தார். வயிற்றில் அல்லு அர்ஜூன் உருவத்தையும் வரைந்து இருந்தார். அவரது பெயர் தாசன் என்றும், கலை ஆர்வம் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை. அவர் கங்கம்மா தல்லி வேடம் அணிந்து, பெருத்த வயிற்றில் வரையப்பட்ட ஓவியத்தை அசைத்துக் காட்டும் காட்சி வலைத்தளங்களில் வைரலானது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல லட்சம் பேரின் பார்வைகளையும் பெற்றுள்ளது அந்த வீடியோ.
- சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
- 10 நாட்களில் உலகம் முழுவதும் 1292 கோடி ரூபாய் வசூலித்துள்ளது
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகம் முழுவதும் 1292 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமே வேகமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படமாகும். திரைப்படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பீலிங்க்ஸ் பாடலின் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பாடலில் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜூன் இடையே நெருக்கமான நடன காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
- தெலுங்கானா ஐகோர்ட் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதால் மறுநாள் காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா-2' திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியானது.
'புஷ்பா' படத்தைப் பார்க்க கதாநாயகன் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு காட்சிக்கு வந்த அல்லு அர்ஜுனைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 24 வயதுடைய ரேவதி என்ற பெண் ஒருவர் இறந்தார். அவரது 8 வயது மகன் உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரேவதி இறப்புக்கு காரணமான அல்லு அர்ஜூனை போலீசார் கடந்த 13-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தெலுங்கானா ஐகோர்ட் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதால் மறுநாள் காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
- நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Hyderabad, Telangana: White sheets put up at the entrance of the residence of Actor Allu Arjun in Jubilee Hills.
— ANI (@ANI) December 24, 2024
Allu Arjun has currently appeared before Hyderabad police at Chikkadpally police station in connection with the Sandhya theatre incident. pic.twitter.com/sPc3kVqdaK
- அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
- அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்
'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அப்போது அல்லு அர்ஜுனிடம் கீழ்கண்ட கேள்விகளை போலீசார் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
1. புஷ்பா - 2 சிறப்பு காட்சிக்கு நீங்கள் வருவதற்கான அனுமதியை காவல்துறை மறுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா?
2. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் நீங்கள் சிறப்பு காட்சிக்கு வருவதற்கான முடிவை எடுத்தது யார்?
3. திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்களா?
4. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?
5. தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றுவதற்கு நீங்கள் அனுமதி வாங்கினீர்களா?
6. தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுடன் பழக உங்களுக்கு அனுமதி உண்டா?
கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜுன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜுன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.
ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
நடிகர் அல்லு அர்ஜூன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி போலீசாரால் கேட்கபட்ட 20 கேள்விகளுக்கு பதிலளித்தார். அதை தொடர்ந்து நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழங்கிய 14 நாள் காவல் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 27-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நிரந்தர ஜாமீன் வழங்க கேட்டு கொண்டனர். ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க போலீசார் கால அவகாசம் கேட்டதால், இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ 1 லட்சம் பிணைத்தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.