search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PUshpa Yagam"

    • கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
    • பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடந்தது. பிரம்மோற்சவ விழா தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் சாமிக்கு புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரமான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தமிழகத்திலிருந்து 5 டன் மலர்களும், கர்நாடகாவில் இருந்து 2 டன் மலர்களும், திருப்பதி தேவஸ்தான புஷ்பவனத்தில் இருந்து 2 டன் மலர்களும் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து மதியம் 1 மணிக்கு சாமந்தி, சம்பங்கி, தாமரை துளசி, மருவம், தவனம்,வில்வம் உள்ளிட்ட 17 வகையான மலர்கள் 6 வகையான இலைகள் கொண்டு மாலை 5 மணி வரை 9 டன் மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடந்தது.

    அப்போது வேத பண்டிதர்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், கிருஷ்ணயஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், பாராயணம் உள்ளிட்ட வேத மந்திரங்களை ஓதினர்.

    திருப்பதியில் நேற்று 73,558 பேர் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடந்தது.
    • காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை அர்ச்சகர்கள் 108 முறை ஓத புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, மொகலி ரெகுலு என 11 வகையான மலர்கள், 6 வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.

    இந்தப் புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.

    புஷ்ப யாகம் முடிந்ததும் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது, இதையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
    • 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 8-ந்தேதி வரை நடந்தது. கோவிலில் நடந்த நித்ய கைங்கர்யங்கள், பிரம்மோற்சவ விழாவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று கோவிலில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் கோவிலில் உள்ள மூலமூர்த்தியிடம் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மலர் கூடைகளை கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக பிரத்யேக மேடைக்கு எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளும் வீதி உலா வந்தனர். மதியம் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடந்தது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா என 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • இன்று இரவு அங்குரார்பணம் நடக்கிறது.
    • நாளை திருவீதி உற்சவம் நடைபெறும்.

    பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நாளை (வியாழக்கிழமை) புஷ்பயாகம் நடைபெறுகிறது. இதற்காக இன்று (புதன்கிழமை) இரவு அங்குரார்பணம் நடக்கிறது.

    இந்த கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மே மாதம் 31-ந் தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த உற்சவத்தின்போது ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேஸ்வரருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் 2.40 மணி முதல் 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    இதில் பல்வேறு வகையான மலர்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் திருவீதி உற்சவம் நடைபெறும்.

    • தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
    • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடந்தது. பிரம்மோற்சவ விழா மற்றும் நித்ய கைங்கர்யங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி நேற்று கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் தலைமையில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி, துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை என 12 வகையிலான 3 டன் பாரம்பரிய மலர்களால் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தினர்.

    புஷ்ப யாகத்துக்கு தேவையான மலர்களை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் வாகனங்களில் காணிக்கையாக கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். புஷ்ப யாகம் முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.
    • வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு தோறும் புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.

    முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் கோவில் அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கண்காணிப்பாளர் ஏகாம்பரம், கோவில் ஆய்வாளர் சீனிவாசலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 8-ந்தேதி ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் சமீபத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.

    அதையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம், 8-ந்தேதி காலை உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை புஷ்ப யாகம், அதன் பிறகு மாலை வீதி உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்தில் வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

    வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க 14 வகையான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.
    ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் (ஸ்ரவண) திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத்ச் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக இன்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.

    நாளை (வியாழக்கிழமை)மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும்.

    வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    திருப்பதியில் நேற்று 32816 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,459 முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    ×