search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quarterly"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
    • காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    முன்னதாக, கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

    காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. #SchoolExamDate #Holidays
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.

    9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).

    செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன் கூட்டியே விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
    ×