search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "r MLA"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்றக் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது
    • கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் தெரிவித்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பூதத்தைக் கிளப்பியுள்ளது.

     

    நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ரோகித் பவார் கூறியதாவது, வரும் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆட்சியில் உள்ள பாஜக - ஷிண்டே கூட்டணி அரசிடம் தங்களது தொகுதிகளுக்கு தேவையான வளர்ச்சி நிதியை கேட்டு வாங்கியதும் அஜித் பவார் பக்கம் இருக்கும் 18 முதல் 19 எம்எல்ஏக்கள் வரை மீண்டும் எங்களிடமே திரும்பி வந்துவிடுவர் என்று தெரிவித்துள்ளார்.

     

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மொத்தமாக 54 இடங்களில் வென்ற நிலையில் கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×