என் மலர்
நீங்கள் தேடியது "rahu ketu"
- நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.
- நாகசதுர்த்தி விரதத்தை கணவர், குழந்தைகள் நலனுக்காக பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.
பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம் பலிப்பது குறைவு. ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம்7 ஜென்மங்களுக்கும் தொடரும். கடுமையான தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சில கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள் அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது அல்லது உடல் ஊனமான குழந்தை பிறக்கும். ஒரு சிலருக்கு தீராத நோய், பரம்பரை வியாதி , குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாகசதுர்த்தி விரதத்தை கணவர், குழந்தைகள் நலனுக்காக பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.
கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டைஅபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும்.
மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்குநாக சிலைகளுக்கு பால், தண்ணீர்அபிஷேகம் செய்யவேண்டும். பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பிறகுநாகர் சிலை மீது மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து,மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்சதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு,படைக்க வேண்டும்.
கற்பூரஆரத்தி காட்டி பூஜை செய்தால் குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவர் மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும்.
நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.
- ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.
- நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி'. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.
கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே 'நாக சதுர்த்தி' தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.
பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.
ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.
பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.
திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.
ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.
திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.
எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.
ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.
ஞானம் என்பது அறிவு.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
“சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.
இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…
“மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”
திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.
ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்
திருப்பாம்புரம் என்னும் திருக்கோவில் பேரளம் அருகில் உள்ளது. இங்கு பாம்புரநாதர் - வண்டார்குழலி அம்மன் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கர்வம் காரணமாக, பலம் இழந்து கீழே விழுந்து, இத்தல ஈஸ்வரனை வழிபட்டு மீண்டும் பலம் பெற்று சிவபெருமானை போய்ச் சேர்ந்தது.
எனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இத்தலத்திற்கு உண்டு.
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
இதைக் கவனித்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் இதுபற்றி தெரிவித்தனர். உடனே அவர், தனது சுதர்சன சக்கரத்தை சுவர்பானு மீது ஏவினார். இதில் சுவர்பானுவின் தலையும் உடலும் தனித்தனியானது. ஆனால் அமிர்தம் அருந்தி இருந்ததால், அவரது உயிர் பிரியவில்லை. அவர் தன் வேதனையை பிரம்மனிடம் சொல்லி முறையிட்டார்.
உடனே பிரம்மன், பாம்பின் உடலையும், தலையையும் அவருக்கு வழங்கினார். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என்றும் அழைக்கப்பட்டனர். மோகினியிடம் தன்னை காட்டிக் கொடுத்ததால் ராகுவுக்கு சூரியனும், கேதுவுக்கு சந்திரனும் பகை கிரகமாகின.
ராகு சூரியனை விழுங்குவதால் தான் சூரிய கிரகணம் வருகிறது என்றும், சந்திர கிரகணம் உருவாக கேது தான் காரணம் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.
கோவிலில் உள்ள சட்ட நாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷ மானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.
திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. கிழக்கில் பைரவர் சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், ராகு கேது, நாயன்மார் நால்வர், ஆகியோர் காட்சி தருகின்றனர்.பாம்புசேரர் கோவில் கருவறை அர்த்தமண்டபம், மகா மண்டம், முகமண்டபம் என அமைந்துள்ளது.
மகாமண்டபத்தில் உற்சவ திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வனையுடன் முருகர் போன்றோர் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் லிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது.
சேடபுரீஸ்வரர் கோவில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். ராகுவும் கேதுவும் திருக்கோவிலின் ஈசானிய மூலையில் ஏகாசரி ரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார்கள்.
தலதீர்த்தமான ஆதிசேஷதீர்த்தம் கோவிலின் எதிரில் உள்ளது. தீர்த்தத்தின் நடுவே, ஆதிசேஷன் சுதை வடிவம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 50-வது தலம் இது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.
இந்தக்கோவில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, கும்பகோணம் நாகநாதர் கோவில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற தலம். இங்கே ஆதிசேஷனுக்கு உத்சவர் விக்ரகம் உள்ளது சிறப்பு.
தமிழ்நாட்டில் ராகுவுக்கான பரிகாரத்தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக்கரையில் அமைந்திருக்கிறது என்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத்தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது.
இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும் சிற்பம். அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த சர்ப்பக் கோலம். இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது.
2. ராகு கால கிருத்திகை பூஜை-புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை-புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை-துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
பாம்பினை அடிப்பதால் வரும் தோஷம்; முன்னோர்களினால் வந்த நாக தோஷம் நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதற்கு கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
2. ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் களத்திர தோஷம், புத்திர தோஷம், 18 வருட 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது, புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.
3. ஏனைய கோவில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராகுவும், கேதுவும் ஒரே உடலில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு.
4. பாம்புரத்தில் பூஜை பண்ணிப் பதம் பெற்றோர் பன்னிருவர் என்று தல புராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட் சோழன் ஆகியோர் இந்தப் பன்னிருவர்.
5. மகா சிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு ஆதிசேஷன் விமோசனம் பெற்றதாக வரலாறு.
6. இந்த ஊரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும், யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.
7. சுவாமி, அம்பாள், ராகு, கேதுவுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை முடிந்தபின் உளுந்துப் பொடி, கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.
8. மகாசிவராத்திரி, ராகு, கேதுப் பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
9. திருப்பாம்புரம் இறைவனுக்கு பாம்புரீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரேசர் என்றும் பெயர்கள் உண்டு.
10. இறைவிக்கு பிரமராம்பிகை, வண்டார் குழலி, வண்டுசேர்குழலி, மாமலையாட்டி. வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயர்கள் இருக்கிறது.
11. இத்தலத்தில் ராஜவிநாயகர், சட்டநாதர். ராகு-கேது ஏகசன்னதி. முருகன்-வள்ளி,தெய்வானை, வன்னிமரத்தடியில் ஆதி பாம்புரேசர்-வன்னீஸ்வரர் சன்னதி. திருமால், பஞ்சலிங்கங்கள், பிரமன், சோமாஸ்கந்தர், நடராஜர், சன்னதிகள் உள்ளன.
12. சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.
13. ராஜகோபுர வாயிலைத் தாண்டி உட்சென்றால் இடப்பால் திருமலையீசர் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.
14. சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.
15. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணி வித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
16. மாசி மாதத்தில் - தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.
17. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122-வது தேவாரத்தலம் ஆகும்.
18. இந்தக் கோயிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒன்று. அவரின் காலம் கி.பி.1178-1218 என்று இருப்பதால், இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று அறிய முடிகிறது.
19. இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
20. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக் கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
21.திருபாம்புரம் தலம் சர்வதோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.
22. திருபாம்பு சுற்றிய புறம் என்பதே பெயர் மருவி திருப்பாம்புரம் என ஆகிவிட்டது.
23. ராகுவையும், கேதுவையும் இணைத்துக் காட்டும் அஷ்டமகா நாகம் எனும் சிலை இத்தலத்தில் உள்ளது.
24. திருப்பாம்புரம் ஆலயத்துக்கு விஜயம் செய்பவர்கள் முதல் ஜாமத்தில் குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரத்தில் நாக நாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தின் பாம்புர நாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி விட்டு வந்தால் மட்டுமே முழுமையானப் பலனைப் பெற முடியும் என்கிறார்கள்.
25. தல விருட்சமான வன்னி மரத்தில் பிரார்த்தனைக்காக குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுகிறார்கள்.
26. ஆதிசேஷன் இந்த தலத்துக்கு வந்தபோது இறைவனை துதித்து வழிபட அமைத்தக் குளமே சிற்றம்பலக் குட்டை என்ற பெயரில் உள்ள குளமாகும்.
27. இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் நீண்ட காலமாக உடல் நலமற்று இருப்பவர்கள் உடல் நலம் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
28. ஆலயத்துக்கு விஜயம் செய்தால் எங்கெங்கு எந்த வரிசையில் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்பதை எழுதி வைத்து உள்ளார்கள்.
29. ஆலயத்தின் தல விருட்சமான வன்னி மரத்தடியில் உள்ள நாகத்திற்கு மஞ்சள் கட்டிய நூலைக் கட்டி தாலிபாக்கியம் பெற வேண்டுகிறார்கள்.
30.ஆலய சன்னதியில் ராகு -கேது சன்னதி உள்ளது. இதன் முன்னால்தான் எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
31. பாம்பு வழிபட்ட தலம் என்பதால் மூலஸ்தானத்தில் எப்போதாவது இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
32. தல விருட்சமான பெரிய வன்னி மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
33. சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.
34. இத்தலத்திற்கு பாம்புரம் தென்காளஹஸ்தி என்ற பெயர் உண்டு.
35. திருஞானசம்பந்தர் இயற்றி உள்ள இத்தலத்துக்கான பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார்.
ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு “சர்பபுரி” என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை “பாம்புரநாதர்” என்றும் “சேஷபுரீஸ்வரர்” மற்றும் “சர்பேஸ்வரர்” என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோவில் பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் இதற்கு காரணம் இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனின் சக்தியே என பக்தர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு அதிசயமாக இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டிய தில்லை என கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.
சர்ப்பதோஷம் அல்லது “நாகதோஷத்தால்” பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும். அதோடு வழிபட இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.
வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7.30 லிருந்து மதியம் 12.30 வரையிலும் மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மாலை வரை திறந்திருக்கும்.
பாம்பு+ புரம்- ஆதிஷேசன். வாயு, ஆதிசேஷன் போட்டியினால் சினம் அடைந்த சிவனிடம் சாபம் பெற்ற ஆதிசேஷன் 12 ஆண்டுகள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம். பிரம்மா, இந்திரன், பார்வதி, அக்னி, தட்சன், அகத்தியர், ஆதிசேடன், சுனிதன், கங்காதேவி, சந்திரன், சூரியன் ஆகியோர் வழிபாடு செய்து பலன் பெற்றுள்ளனர்.
வடமொழிக்கு ஈடானது தமிழ் என தேவர்கள் முனிவர்களுக்கெதிராக வாதிட்ட அகத்தியர் ஊமையாக சாபம் பெற்று இங்கு சிவராத்திரி 1ம் சாமத்தில் வழிபட்டு சாபம் நீங்கினார்.
பிரம்மா தன்னால் படைக்கப்பட்ட திலோத்தமையின் அழகில் மயங்கி சாபமடைந்து இங்கு ஓராண்டு வழிபட்டு சாபம் நீங்கியது.
தட்சன் வேள்வியில் கலந்து கொண்ட அக்னி சாபமடைந்து இங்கு சிவராத்திரி 2-ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.
சிவனின் கண்களை மூடிய பார்வதி 12 ஆண்டுகள் இங்கு தவமிருந்து சிவராத்திரி 4ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.
தட்சனின் யாகசாலை சிதைத்து தலையை வீரபாகு வெட்ட தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தி தட்சனின் உடலில் ஆட்டுத்தலையை ஒட்டி உயிர்பிக்க கர்வம் அடங்கி 12 ஆண்டுகள் பூஜை செய்து சிவராத்திரி 4ம் சாமத்தில் பேறு பெற்றார்.
கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்க இங்கு பூஜை செய்து சிவராத்திரி 2ம் சாமத்தில் பேறு பெற்றார். சூரியன் கங்கையில் நீராடி மயூரநாதரை வழிபட்டு பாம்புரத்தில் 1000 பூக்களால் 12 ஆண்டுகள் அர்சித்து தன்னுடன் ஒளியை கூட்ட அருள் பெற்றான்.
சுனிதன் தன்னுடைய முயலகன் நோய் தீர வழிபட்டான். கோச்செங்கட் சோழன் குட்ட நோய் தீர வழிபாடு. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்..
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது..
ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். இந்திரன் சாபம் நீங்கிய தலம். கங்கை பாவம் தொலைந்த தலம்.
சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.
ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.
திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது நம்பிக்கை. பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் போன்றோர் பூஜை செய்த தலம்.
அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும். சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.