என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul dravid shivam dube"

    • பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
    • 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:

    இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

    அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    என்று அவர் கூறினார்.

    ×