search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raj bhavan chennai"

    • 13-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
    • பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை தவிர்த்தும், மறைந்த தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் புறக்கணித்தும் கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

    அவருக்கு எதிராக போராட்ட அறிவிப்புகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. 13-ந்தேதி அன்று கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதே போன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக 25 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு- பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் மாளிகை நுழைவு வாயில் உள்பட அனைத்து வாயில்களும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ×