என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Raj Kundra"
- நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர்.
- சத்யக் கோல்டு நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நகை வியாபாரி பிரிதிவிராஜ் கோதாரி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலைக்கு தங்கம் பெறலாம் என கூறினர்.
இதை நம்பி நான் அவர்களது நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் சொன்னது போல தங்கமும் தராமல், எனது பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் மீது பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி என்.பி. மேத்தா விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறினார். எனவே அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதான மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பி.கே.சி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா.
- அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை :
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. தொழில் அதிபரான இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலீசார் ஆபாச பட வழக்கில் கைது செய்தனர். ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலி மூலம் வினியோகம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜ்குந்த்ரா மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்த வழக்கில் இருந்து அவரை விடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ராஜ்குந்த்ரா பணப் பலன் அல்லது வேறு எதுவும் பலன் அடைந்ததற்கான எந்த ஆதாரங்களும் போலீசார் கண்டறியவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்குந்த்ரா மனு குறித்து அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பையை சோ்ந்த தொழில் அதிபர் நிதின் பாரய் பாந்திரா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவன இயக்குனர் காசிப்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்தை முதலீடு செய்யுமாறு என்னிடம் கூறினர். இதற்காக எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவனத்தின் சார்பில் புனேயில் உள்ள ஹடாப்சர் மற்றும் கோரேகான் பகுதிகளில் ஜிம், ஸ்பா திறந்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நான் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னது போல அவர்கள் செய்யவில்லை. மேலும் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஷில்பா ஷெட்டி இந்த குற்றச்சாட்டை மறுத்து வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ் குந்த்ரா நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்