search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raj Limbani"

    • முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ×