search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan Man"

    • பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது.

    பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான அமெரிக்கா காட் டேலண்ட் நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன் பங்கேற்று கிட்டாரில் பாப் பாடல் வாசித்து அசத்திய வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த இளம் நடன கலைஞர் பிரவீன் பிரஜாபத் பங்கேற்று தனது தலையில் 18 கண்ணாடி கிளாஸ்களுக்கு மேல் பானையை வைத்து நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் பிரவீன் பிரஜாபத் தனது தலை மீது 18 கண்ணாடி கிளாஸ்களை அடுக்குகின்றார். அவற்றின் மேல் ஒரு பானையை வைத்து சமநிலை படுத்திக் கொண்டே பிரவீன் பிரஜாபத் அசத்தலாக நடனமாடுகிறார்.

    இதை பார்த்து நடுவர்கள் திகைத்தனர். இந்த வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பிரவீன் பிரஜாபத்தின் திறமையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    ×