என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajkumar periyasamy"

    • மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.


    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்

    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்


    இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்
    • தனுஷின் 55 -வது திரைப்படத்தை அமரன் திரைப்பட இயகுனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது.

    ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் "அமரன்" படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "அமரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை உறுதி படுத்தும் வகையில் இன்று படக்குழு அறிவித்துள்ளது.

    தனுஷின் 55 -வது திரைப்படத்தை அமரன் திரைப்பட இயகுனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
    • எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

    இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
    • ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி மற்றும் நகைச்சுவையால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். இதனை தொடர்ந்து 'பசங்க' படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் 'மெரினா' என்ற படத்தில் கதாநாயகனாக 2012-ம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவே கைகொடுத்தது.



    அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தில் துணை நடிகராவும், மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர்.லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான், ப்ரின்ஸ், மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.



    மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், கனா, லிப்ட், மாவீரன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

    இதனிடையே, 2018-ம் ஆண்டு வெளிவந்த 'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் இப்படத்தில் கௌரவ கதாபாத்திரலும் நடித்து இருந்தார்.

    இப்படி, நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி, கதாநாயகன், பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் தான் 'அமரன்'. இப்படத்தில் நடித்தன் மூலம் சிவகார்த்திகேயனை உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



    'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது.

    இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

    சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனும், சாய்பல்லவியும் இணைந்து நடித்த முதல் படம் இதுவாகும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

    'அமரன்' படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்தவர்களின் கண்ணீரையும் வரவைத்தது.



    இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எஸ்கே 21 என்ற பெயரில் ஜனவரி 2022ம் ஆண்டும் இப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் படத்தின் தலைப்பு உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி.எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனுக்கு உச்ச நட்சத்திர அந்தஸ்தையும் இந்த படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நடிகை சாய்பல்லவிக்கும் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்தை இயக்கிய ராஜ்குமார் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனுஷ் படத்தை முடித்துவிட்டு இந்திப் படமொன்றை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது அமரன் திரைப்படம்
    • கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

    சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் இதுவரை 335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாய் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து அமரன் திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் எமோஷனலான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
    • இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர். கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. ஓ.டி.டியில் வெளியாகியும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் 'அமரன்' படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி இருப்பதாக அறிவித்து உள்ளனர். சிறந்த ஊக்கமளிக்கும் 10 படங்கள் பட்டியலில் அமரன் படத்தை இடம்பெறச் செய்து திரையிடுகிறார்கள். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×