என் மலர்
நீங்கள் தேடியது "Rajnathsingh"
- தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
- ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது. தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருக்கின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி , நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக சிலருக்கு கடந்த 11-ந்தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாலுமரதா திம்மக்கா (வயது 106) என்ற முதிய பெண்மணியும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு அவர் விருதுக்காக அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நோக்கி புன்சிரிப்புடன் வந்தார்.
அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். இதை எதிர்பார்க்காவிட்டாலும், திம்மக்காவின் அந்த எளிய அன்பை ஜனாதிபதி பணிவுடன் தலை குனிந்து ஏற்றுக்கொண்டார்.

கர்நாடகாவின் குலிக்கல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா தனது கணவருடன் இணைந்து ஏராளமான மரங்களை நட்டு வளர்த்துள்ளார். குழந்தைகள் இல்லாததால் இளம் வயதில் தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மரம் வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார்.
இவ்வாறு கடந்த 65 ஆண்டுகளில் 400 ஆலமரங்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை திம்மக்கா நட்டு வளர்த்து இருக்கிறார். மரங்களை வெறுமனே நட்டுவிட்டு செல்லாமல் அவற்றை தொடர்ந்து பராமரித்தும் வந்திருக்கிறார் திம்மக்கா. இதற்காக 4 கி.மீ. தொலைவு வரை சென்று தண்ணீர் சேமித்து வந்து அரிய சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு அவரது கணவர் மரணமடைந்தார். எனினும் திம்மக்காவின் மரங்கள் மீதான காதல் தொடர்ந்தது. திம்மக்காவின் இந்த சேவைக்காக அவரை ‘மரங்களின் தாய்’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த அரிய பணிகளுக்காகவே அவருக்கு பத்மஸ்ரீ விருதும் தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தவிர மேலும் பலர் நேற்று பத்ம விருதுகள் பெற்றனர். இதில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
மேலும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரபால், கூடைப்பந்து வீரர் பிரசாந்தி சிங், நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஒடிசாவை சேர்ந்த டீ வியாபாரி பிரகாஷ் ராவ் ஆகியோரும் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். #ManojBajpayee #PadmaAwards #RamNathGovind
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 112 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து கடந்த 11ம் தேதி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 56 பேருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இதில் திரைத்துறை சார்பில் மோகன் லால், பிரபுதேவா, டிரம்ஸ் மணி உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, கானா பாடகி தேஜன் பாய் பத்ம விபூஷண் விருது பெற்றார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவுத்துறை ஆகியவற்றிற்காக மகாஷை தரம்பால் குலாத்தி, மலையேறும் பணிக்காக பச்சேந்திரி பால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். #PadmaAwards #RamNathGovind