search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rakshabandhan"

    • திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
    • சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்‌ஷாபந்தன் கொண்டாடக்கூடாது

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.

    அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

    மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

    நல்ல நேரம்

    பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.

    அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10  மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணம்.
    • ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

    ரக்‌ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சகோதரத்துவத்தை போற்றும் இந்த பண்டிகையை முன்னிட்டு அம்மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பரிசாக இலவச பேருந்து பயணம் கருதப்படுகிறது

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான பயணத்திற்காக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்க வேண்டும். ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×