search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "random inspection"

    • மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார்.

    வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கடைகளை தாண்டி மேற்கூரை போடக்கூடாது.

    கடைகளை ஆக்கிரமித்து அமைக்க கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விதி மீறல்களில் ஈடுபட கூடாது.

    மேலும் மாட்டு மேஸ்திரி சந்தில் இன்று முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடைபாதைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மின்விளக்கு பொருத்த உத்தரவிட்டார்.முன்னதாக நேற்று மாலை தெற்கலங்கம் பகுதியில் தனியார் நகைக்கடை சார்பில் வாகனத்தில் விளம்பர ஸ்டிக்கர் பதாகை அமைத்து ஆடியோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆனால் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஸ்டிக்கர் பதாகை அமைத்து விளம்பரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு ரூ .25 ஆயிரத்தை அபராதமாக விதித்து ஆணையர் சரவணகுமார் உத்தர விட்டார்.

    இந்த ஆய்வில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது

    கடலூர்:

    மீன்சந்தையில் விற்கப்படும் மீன்கள் நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒருசில வியாபாரிகள் ரசாயன கலவைகள் பூசி மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.

    இந்த ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடுவதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன், கடலோர அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் அடங்கிய குழு கடலூர் துறைமுகத்தில் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? மீன்கள் தரமாக, சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை.

    மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர்.
    • கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர். இதை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அலுவலர்கள் சிங்காரவேல், மனோகரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    20-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு நடந்தது. அப்போது வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த சுமார் 10 மூட்டை அஸ்கா பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்கா கெமிக்கல் கலந்த 1050 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர். 4 ஆலை கொட்டகைகளில் வெல்லம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர் .

    பின்னர் பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கு மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும்ஆலைக் கொட்டகை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் பேசுகையில். வெல்லம் தயாரிக்க கலப்படத்தை தவிர்க்க வேண்டும். அஸ்கா மற்றும் கெமிக்கல் கொண்டு வெல்லம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிக்கும் பணியில் அடுப்பு எரிக்கும் போது வேஸ்ட் துணி மற்றும் டயர்களை பயன்படுத்தக் கூடாது. அனைத்து ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட வேண்டும். வெல்லம் தயாரிக்கும் ஊழியர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    • விக்கிரவாண்டிபேரூராட்சியில் புதிய வரிவிதிப்பு உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் புதிய வரி விதிப்பு அமல்படுத்த அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர். இந்த பணியை கடலுார் மண்டலபேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீர் ஆய்வு செய்து அளவீடுகளையும், வரிகளையும்சரிபார்த்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை , இளநிலை உதவியாளர் ராஜேஷ்,வரி தண்டலர்கள் தண்டபாணி,ஜெயசீலி,கலைவாணி , துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன்,மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×