என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rashtrapati Bhavan"
- ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளிண் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
- தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளிண் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் தான் 1948-ம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சி.ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார்.
தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பதவியேற்பு விழாவின்போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சி.
- சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
அப்போது பதவியேற்பு விழாவின்போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்று கேள்வி எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையின் பின்னாள் சென்ற விலங்கு தொடர்பாக டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பின் போது காணப்பட்ட விலங்கு வீட்டுப் பூனை, சிறுத்தை அல்ல என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
- சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
- தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும்.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவவர் மாளிகை) தேநீர் விருந்து அளித்தார். இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இவர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
- அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும்.
அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். அதுபோல், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம்.
மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இடையில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002- 2007 காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிடார். இப்தார் நோன்பு நிகழ்சிக்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக அவர் அளித்து வந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படாது என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறியதாவது :-
ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர் மத ரீதியான எந்த நிகழ்சிகளும் பொதுமக்களின் வரி பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது இல்லை என அவர் முடிவு செய்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் மதம் தவிர அனைத்து சமய நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.
நிச்சயம் அனைத்து மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பார் என அசோக் மாலிக் குறிப்பிட்டுள்ளார். #Iftarparty
மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பிந்தைய 2-வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
3-வது அமர்வில் மாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பொருட்களில் விவாதங்கள் நடக்கிறது. 4-வது அமர்வில் ராஜ்யபால் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் விவாதிக்கின்றனர்.
மாநாட்டின் 5-வது அமர்வில் (5-ந்தேதி) மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்த விவாதமும், 6-வது மற்றும் இறுதி அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர்கள் அறிக்கை வழங்கலும் இடம்பெறுகிறது. இந்த அமர்வில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை, வெளியுறவுத்துறை மந்திரிகளும் உரையாற்றுகின்றனர்.
இதைப்போல துணைநிலை கவர்னர்களுக்கு என சிறப்பு அமர்வு ஒன்றும் 5-ந்தேதி தனியாக நடத்தப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்களின் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன், மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். #Conference #Governors #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்