search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration shop palm oil"

    • சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள்.
    • சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.

    ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் ஒரு பாக்கெட் விலை ரூ.30-க்கு கொடுக்கப்படுகிறது. இந்த பாமாயில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் வாங்கி பயன்படுத்தாமல் விற்றுவிடுகிறார்கள். இல்லையெனில் தாளிப்பதற்கு, அப்பளம், வடை சுட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிடுகிறார்கள். காரணம் இதை சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான்.

    அது மட்டுமல்லாமல் இதில் நிறைய கொழுப்பும் இருப்பதால் இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடல் எடையை கூட்டும், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். எனவே சிலர் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் பித்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும் என்றும் கூறுகிறார்கள்.

    சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விட்டமின் ஏ நிறைய இருக்கிறது. எனவே ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பாமாயிலை வீட்டிலேயே சுத்திகரித்து, அதில் உள்ள பித்தத்தை போக்கிவிடலாம். எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருள்:

    ரேஷன் பாமாயில்

    புளி- சிறிதளவு

    கல் உப்பு- சிறிதளவு

    இஞ்சி-சிறிய துண்டு

    செய்முறை:

    மிதமான தீயில் இரும்பு கடாயை வைத்து அதில் வாங்கி வந்த பாமாயிலை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாகும் போது இதில் புளியை உருட்டி அதன் நடுவே உப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த புளியை வடை போல் தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சியை போட வேண்டும். இவற்றையெல்லாம் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே கொதிக்கவிடவும்.

    புளி, இஞ்சி ஈரத்தன்மை கொண்டிருப்பதால் அது பொறிந்து கொண்டே இருக்கும். இந்த சலசலப்பு அடங்கியதும் எண்ணெய்யை இறக்கி ஆறவிடவும்.

    இந்த எண்ணெயில் இருந்த பித்தத்தை இஞ்சி இழுத்துக் கொண்டிருக்கும். அதன்பிறகு புளி, இஞ்சியை எடுத்துவிடலாம். இதை சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். அப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும்.

    இப்போது நீங்கள் ரேஷனில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமானதாக மாறிவிட்டது. இனி எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ×