search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Razer"

    • ரேசர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் அளவு கொண்ட புதிய கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய கேமிங் கன்சோல் 5ஜி கனெக்டிவிட்டி, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ரேசர் நிறுவனம் ரேசர் எட்ஜ் 5ஜி சாதனத்தை ரேசர்கான் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. குவால்காம் மற்றும் வெரிசன் நிறுவனங்கள் கூட்டணியில் இந்த கேமிங் கன்சோலை ரேசர் உருவாக்கி இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய கேமிங் கன்சோல் ஸ்மார்ட்போன் அளவில் கைகளில் வைத்துக் கொண்டு விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கேமிங் கன்சோலில் AAA கேம்கள், ஆண்ட்ராய்டு கேம்களான ஃபார்ட்நைட், ராக்கெட் லீக் சைடுஸ்வீப் உள்ளிட்டவைகளையும் விளையாடலாம். எபிக் கேம்ஸ் லான்ச்சர் மூலம் இந்த கேம்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே கிடைக்கிறது. கிளவுட் ஸ்டிரீமிங் சேவைகளான NVIDIA ஜீபோர்ஸ் நௌ மற்றும் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் உள்ளிட்டவையும் ரேசர் எட்ஜ் 5ஜி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் ரிமோட் பிளே ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பிசி லைப்ரரி அக்சஸ் ஸ்டிரீம் லின்க், மூன்லைட், பார்செக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.

    ரேசர் எட்ஜ் 5ஜி அம்சங்கள்:

    6.8 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர்

    8 ஜிபி LPDDR5 ரேம்

    128 ஜிபி UFS 3.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

    5MP செல்பி கேமரா

    5ஜி, வைபை 6E, ப்ளூடூத் 5.2

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய ரேசர் எட்ஜ் 5ஜி-யுடன் ரேசர் கிஷி வி2 ப்ரோ கண்ட்ரோல்ர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அமெரிக்காவில் ரேசர் எட்ஜ் 5ஜி விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 856 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ரேசர் எட்ஜ் 5ஜி மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    இத்துடன் ரேசர் எட்ஜ் ஃபவுண்டர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ரேசர் ஹாமர்ஹெட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் விலை 499 டாஸர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 091 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்குகிறது.

    ரேசர் நிறுவனம் தனது ரேசர் போன் 2 அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை அறிவித்துள்ளது. முதல் தலைமுறை ரேசர் போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. #RazerPhone2
    ரேசர் போன் 2 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் முதல் தலைமுறை ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரேசர் போன் 2 அக்டோபர் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்கான அழைப்பினை ரேசர் வெளியிட்டுள்ளது. முன்னதாக ரேசர் போன் 2 விவரங்கள் சீனாவின் AnTuTu வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியானது.



    சீனாவின்பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆன விவரங்களில் ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத்துடன் 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை.

    இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RazerPhone2
    ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செயய்ப்பட்டது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 15.6 இன்ச் அளவில் உலகின் சிறிய கேமிங் லேப்டாப் மாடலாக ரேசர் பிளேடு இருக்கிறது.

    ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, இதன் 4K டிஸ்ப்ளே வேரியன்ட் மல்டி டச் வசதி, 4.9 மில்லிமீட்டர் அளவு மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. அடக்கமான வடிவமைப்பு, ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் அனோடைஸ் செய்யப்பட்ட பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ரேசர் கோர் X என்பது தன்டர்போல்ட் 3 எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆகும். இது கேமிங் திறனை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ரேசர் கோர் சீரிஸ் எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் கோர் வி2 மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 வசதி கொண்ட மேக் லேப்டாப்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது இன்டிகிரேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் லேப்டாப்-ஐ டெஸ்க்டாப் தர கேமிங் இயந்திரங்களாக மாற்றும். இது விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் வசதியை கொண்டுள்ளது. அதிகபட்சம் 3-ஸ்லாட் அகலமான டெஸ்க்டாப் கிராஃபிக்ஸ் கார்டுகளை தாங்குவதோடு சமீபத்திய டெஸ்க்டாப் PCle கிராஃபிக்ஸ் கார்டுகளையும் சப்போர்ட் செய்யும்.



    ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் சிறப்பம்சங்கள்:

    - 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் அதிகபட்சம் 144Hz / 4K 3840x2160 டிஸ்ப்ளே
    - இன்டெல் கோர் i7-8750H (8th Gen) பிராசஸர்
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.1 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - NVIDIA GeForce GTX 1060 Max-Q / NVIDIA GeForce GTX 1070 Max-Q
    - அதிகபட்சம் 32 ஜிபி ரேம்
    - அதிகபட்சம் 512 ஜிபி PCIe SSD, 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
    - விண்டோஸ் 10
    - 1 எம்பி வெப்கேமரா
    - வைபை, ப்ளூடூத், தன்டர்போல்ட் 3 (யுஎஸ்பி-சி) x 1, யுஎஸ்பி 3.1x 3
    - மினி டிஸ்ப்ளே போர்ட் 1.4 x 1
    - 3 செல்கள் 48 Whrs பேட்டரி



    விலை மற்றும் விற்பனை:

    ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி 60 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 1899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,29,138) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 144 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மாடல் விலை 2199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,49,610) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேசர் பிளேடு லேப்டாப் 4K டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 2899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,97,213) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முதறகட்டமாக ரேசர் கோர் X லேப்டாப் அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×