search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCB"

    • நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன்.
    • நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்திற்கு முன்பு அந்த அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. எனவே கே. எல். ராகுல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

    இந்த நிலையில் கே.எல். ராகுல் கூறும் போது தனக்கு சுதந்திரம் வேண்டும், அணியில் நல்ல சூழ்நிலை வேண்டும் என்றும், இந்திய 20 ஓவர் அணியில் தனக்கு வாய்ப்பு பறிபோக லக்னோ அணியில் சரியான சூழலில் தான் விளையாடாதது தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    2025 ஐ.பி.எல். போட்டியில் விருப்பப்படும் ஐ.பி.எல். அணியில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன். மெகா ஏலத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். எனது சொந்த மைதானமான பெங்களூருவில் ஆர்.சி.பி. அணிக்காக சின்னசாமி ஸ்டேடியத்தில் சொந்த ரசிகர்கள் முன்பு விளையாடுவற்காக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அன்பும், மரியாதையும் கொண்ட அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஆர்.சி.பி. அணியினர் விளையாடி இருந்ததை மிகவும் ரசித்தேன். பெங்களூரு தான் எனது சொந்த ஊர். அங்குள்ளவர்களுக்கு என்னை உள்ளூர் பையன் என்று தெரியும். அங்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன். நான் அதற்கு தகுதியானவன் என்று நீங்கள் கருதி அதை வழங்கினால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அந்த சூழலில் தான் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். மதிக்கப்படுவீர்கள்.

    தொடக்க வீரர், மிடில் ஆர்டர், பின்கள வரிசை, விக்கெட் கீப்பிங் என்று எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் எப்போதும் சரியாக இருப்பேன்.

    இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

    32 வயதான பெங்களூரை சேர்ந்த கே.எல். ராகுலின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை 2013-ல் தொடங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2014, 2015-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆடினார். 2016-ல் மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு வந்தார். அப்போது அவர் 397 ரன் குவித்து பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக நிகழ்ந்தார். பின்னர் பஞ்சாப் அணிக்கு சென்றார். அங்கு கேப்டன் பொறுப்பு வகித்தார்.அங்கிருந்து தான் லக்னோ அணி அறிமுகம் ஆனபோது அந்த அணிக்கு சென்றார்.

    தற்போது கே.எல்.ராகுல் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்ப இருக்கிறார். அந்த அணி நிர்வாகம் விராட்கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5கோடி) ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்து இருக்கிறது.

    • ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார்.
    • பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய கிரிக்ட்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் தனது வாழ்க்கை குறித்து சுயசரிதை பாணியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியில் விளையாடும் மேக்ஸ்வெல்,  விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணி குறித்து தனது புத்தகத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார். 2021 இல் ஆர்சிபியில் விராட், நான் மற்றும் ஏபி டெல்விலியர்ஸ் மிடில் ஆர்டரில் விளையாடுவோம் என்று அவர்கூறிய திட்டம் எனக்கு பிடித்திருந்தது. சச்சின், ரிக்கிக்கு இணையான வீரர்களுடன் விளையாடுவது அற்புதமானது. அதன்பின் ஏலங்கள் நடந்தன. ஆர்சிபி என்னை தேர்ந்தெடுத்து அழைத்தபோது, உலகிலேயே மகிழ்ச்சியான கிரிக்கெட்டராக என்னை உணர்ந்தேன்.

     

     பெங்களூரில் ஒரு பிளேயராக எனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினேன். பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது. 2023 மூன்றாவது சீசனின்போது ஆர்சிபியை நான் எனது வீடாக உணரத் தொடங்கினேன். உரிமையாளர்கள் மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

     

    • ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.
    • பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும்.

    தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அவர்களது ஹோம் கிரவுண்ட்- எம் சின்னசாமி மைதானத்தை புரிந்து கொண்டு விளையாடும் அணியை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதோடு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.

    முன்னாள் ஆர்.சி.பி. வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அந்த அணி யுஸ்வேந்திர சாஹலை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆர்.சி.பி. அணி ஹோம் கிரவுண்டில் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட உறுதியான மற்றும் அனுபம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இவர்கள் தவிர போட்டியை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்களை வாங்குவதற்கு ஆர்.சி.பி. அணி மீதித் தொகையை செலவிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ்- சாஹல், அஸ்வின், ககிசோ ரபாடா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த நான்கு வீரர்களுக்கு அதிக தொகையை செலவிடலாம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் விராட் இருக்கிறார். வீரர்களை தக்கவைப்பதில் நாம் அதிக தொகையை செலவிடவில்லை. இன்னும் செலவிட அதிக தொகை இருப்பது நல்ல விஷயம்," என்று தெரிவித்தார். 

    • ஐபிஎல் மெகா ஏலம் இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
    • ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகின்றனர்

    இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு போன் செய்து, தக்க வைப்பது குறித்து பேசினார்கள். நாங்கள் அரை மணி நேரம் பேசினோம். ஒவ்வொரு அணியும் இவ்வாறு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இது அணிக்கும் வீரர்களுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும். நான் மீண்டும் ஆர்சிபிக்கு வந்தால் எனக்கு சந்தோஷம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் 2021-ல் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார்.
    • அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியில் விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவரே ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

    ஐபிஎல் 2021-ல் ஆர்சிபியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது,

    • மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
    • தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும். ஏலத்தில் ஒரு அணி ரூ.120 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த ஊதியம் ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வீரர்களை எடுப்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    உதாரணமாக பெங்களூரு அணியில் ரஜத் படிதாரை விடுவித்து விட்டு பிறகு ஏலத்தில் அவரை ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு ஆர்.டி.எம். சலுகை மூலம் வாங்க முடியும். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜையும் இழுத்துக் கொள்ளலாம். சிராஜை தக்க வைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் ஏலத்தில் அவர் அவ்வளவு விலைக்கு போகமாட்டார்.

    எனவே பெங்களூரு அணியினர் புதிய மனநிலையுடன் ஏலத்துக்கு செல்ல வேண்டும். அந்த அணிக்கு விராட் கோலி தேவை. அவர் அணிக்காக பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ளார். அவர் மிகவும் முக்கியமான வீரர். அதனால் பெங்களூரு அணி அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இந்த அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் மதிப்பு ரூ.18 மற்றும் ரூ.14 கோடியாக இருப்பதை நினைத்து பார்க்க முடியாது' என்றார்.

    • ஆர்சிபி அணியில் ரிஷப் பண்ட் வருவதில் விராட் கோலிக்கு விருப்பம் இல்லை என தகவல் வெளியாகியது.
    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இணைய ரிஷப் பண்ட் விருப்பம் தெரிவித்ததாகவும், கேப்டன் பொறுப்பு கேட்டதால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இவர் ஆர்சிபி-க்கு வருவதில் விராட் கோலிக்கு விருப்பம் இல்லை எனவும் எக்ஸ் பக்கத்தில் ராஜிவ் என்பவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த எக்ஸ் பதிவிற்கு இந்திய வீரர் ரிஷப் பண்ட் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "சமூக வலைதளங்களில் ஏன் பொய்ச் செய்தியை பரப்புகிறீர்கள்? இது மிகவும் தவறான செயல். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். ஒருபோதும் நம்பிக்கையற்ற சூழலை உருவாக்காதீர்கள். இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவது ஒன்றும் புதிது கிடையாது. இத்துடன் இது நிற்கப்போவதும் கிடையாது. நாளுக்கு நாள் இது மோசமாகிக் கொண்டேதான் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன.
    • வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் வீரர்களும் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளனர். மேலும் வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன. நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்த போதிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்நிலையில், விநாயகர் சிலையின் பாதத்தில் 'ஈ சாலா கப் நமதே (இந்த ஆண்டு கோப்பை நமதே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025' என்று எழுதப்பட்ட காகிதத்தை ரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ஒன்பது முறை பிளேஆஃப் சென்று மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் கடுமையாக சொதப்பினார்.
    • இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

    ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த நிலையில், ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியை Unfollow செய்துள்ளார். இதன்மூலம் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025-யில் புதிய உரிமைக்காக விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.   

    • அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி.
    • விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக மும்பை, சென்னை அணிகள் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதை தவிர ராஜஸ்தான், டெக்கான் ஜார்சஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

    இந்த கோப்பையை வெல்லாதா அணியாக ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி இடம்பெற்ற ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி என அந்த அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி. நான் பெங்களூரு அணியில் இருந்த போது விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

    அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை இருந்தது. எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை

    இவ்வாறு பார்தீவ் படேல் கூறினார்.

    • ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
    • கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது!

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்த நாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் ஆர்சிபி-க்கு திரும்புகிறார். அவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிறார்.

    கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு முழு அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி! என தெரிவித்துள்ளது.


    • மும்பை இந்தியன்ஸ் அணி 4 இடத்தில் உள்ளது.
    • ஆர்சிபி அணி 2-வது இடத்தில் உள்ளது.

    உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 6.5 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிராண்ட் மதிப்பு 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் பிராண்ட் மதிப்பு 28 கோடி ரூபாய் ஆகும்.

    டாடா குரூப் ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது. இதற்காக 2024 முதல் 2028 வரை தோராயமாக 2500 கோடி ரூபாய் செலுத்த உள்ளது. இது கடந்த முறையைவிட சுமார் 50 சதம் அதிகமாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (23.1 கோடி அமெரிக்க டாலர்) பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த போதிலும் மிகவும் மதிப்புமிக்க அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டை விட மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் வளர்ச்சி 19.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    ஆர்சிபி அணி (22.7 கோடி அமெரிக்க டாலர்) 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (21.6 கோடி அமெரிக்க டாலர்) 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திறகு பின்தங்கியுள்ளது.

    ×