என் மலர்
ஐ.பி.எல்.

கொல்கத்தாவுக்கு எதிராக 38 ரன் தேவை: ஐபிஎல் கிரிக்கெட்டில் அரிய சாதனைப் படைக்க இருக்கும் விராட் கோலி
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
- 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மழையினால் பாதிக்க வாய்ப்புள்ளது. வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
நாளை நடக்கும் போட்டியில் விராட் கோலி ஒரு அரிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் நாளைய போட்டியில் 38 ரன் அடித்தால் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடப்பார்.
இதன்மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். விராட் கோலி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலிக்கு இது 18 ஆவது சீசன் ஆகும் இதுவரை 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.