search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recitation"

    • பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
    • பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.

    அவிநாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டியும் 10,008 முறை அவிநாசி பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சிவாச்சாரியாா் ஆரூா் சுப்பிரமணியம், சிவன்மலை சந்திரசேகரன் ,பழனி ,விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா். 

    • கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர்.
    • காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனை நடைபெற உள்ளது.

    அவினாசி :

    அவினாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ந் தேதி கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர்.இது இறைவனின் செயலோ என்று பக்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    திருப்பொக்கொளியூர் எனப்படும் அவிநாசியில் சிவபெருமான் பல்வேறு திருவிளையாடல் நிகழ்த்தியிருக்கிறார். முதலை உண்ட பாலனை மீட்டுத்தந்த இறைவன் தற்போதைய அசம்பாவிதங்களையும், சங்கடங்களையும், சாஸ்திர விதிமீறல்களையும் நிச்சயம் நீக்கிக்கொடுப்பார் என சிவனடியார்களும், சிவாச்சார்யார்களும் நம்புகின்றனர்.

    அந்த வகையில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் வருகிற 11ந் தேதி சிறப்பு வழிபாடும், அவிநாசியம்பதியில் நம்பி ஆரூரர் அருளிய அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்து விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் கூறுகையில், வரும் 11ந் தேதி காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனையும், அதனை தொடர்ந்து அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து எட்டு முறை பாராயணம் செய்யும் நிகழ்வும் நடைபெற உள்ளது. காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புண்ணிய கைங்கர்யத்தில் அனைத்து பக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று அனைத்துவித இன்னல்கள் நீங்கவும், விரைவில் கும்பாபிேஷக விழா நடைபெறவும் வேண்டி அவிநாசி பதிகம் பாடி இறையருள்பெறலாம் என்றார்.

    • ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவிநாசி :

    அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

    அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

    முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×