என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "registration of case"
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அம்சாயால் (வயது 50), குரியமங்கலம் டாஸ்மாக் கடை அருகே புவனகிரி ஆதிபராநத்தம் பழனிவேல் (43) இவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி ல்வதும் தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 37 அட்டைப் பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1344 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் வடகரை மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 26), கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சம்மந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பரது மகன் விக்ரம் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபாட்டில் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
- ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார் புரத்தில் மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு, அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளை கண்ணு என்பவர் வீட்டிற்கு சென்று பிரபாகர் சோதனை செய்த போது, அரசு அனுமதி இன்றி நாட்டு வெடி 1½ மூட்டை இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த நாட்டு வெடி சமீபத்தில் சிவனார்புரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்த கோசலா மற்றும் சேகர் ஆகியோர் தயாரிக்கும் இடத்திலிருந்து கொண்டு வந்து வெள்ளைகண்ணு வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வெடி வைத்திருந்த மூட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் பறிமுதல் செய்து, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளை கண்ணு, முத்தம்மாள், கோசலா, சேகர் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கன்னாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ெஜயா (வயது 47) இவரது கணவர் சிவக்குமார். இந்நிலையில் ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, போலீசார் வருவதை பார்த்து ெஜயா வீட்டிலிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் வீட்டில் மறைத்து வைத்திருந்த 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயாவை தேடி வருகின்றனர்.
- அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டி பாளையம் பழைய பாலம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சோலார் ஈ.பி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆவார்.
இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. பாலும் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு 4 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் மலையம் பாளையத்தை அடுத்த கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்க செய்தார்.
அப்போது அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் விழுந்தது. பொருட்களும் சிதறி கிடந்தன.
சம்பவ இடத்துக்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.
இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று 2-வது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
- குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார்.
- குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். பண்ருட்டி அருகே கவரப்பட்டு ஹவுசிங் போர்டு சுந்தரமூர்த்தி. இவருக்கும்,மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. எனவே சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார். இது பற்றி சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் ராணி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாமியார் மீனா, மருமகன் சுந்தரமூர்த்திஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சுபஸ்ரீ மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
- கடலூர் அருகே லாரியில் கடத்தி சென்ற 1 டன் இரும்பு பறிமுதல் செய்யப்பட்டது.
- இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே சிந்தாமணிக் குப்பம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது 1 டன் இரும்பு இருந்தன. பின்னர் இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வாகனத்தில் இருந்த லாரியில் இருந்து நபர்கள் திடீரென்று தப்பி ஓடினார்கள். உஷாரான போலீசார் அவர்களை துரத்தினர். ஆனால் அவர்களை பிடிக்க சென்றபோது பிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்