என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உரிமையாளர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
- அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டி பாளையம் பழைய பாலம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சோலார் ஈ.பி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆவார்.
இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. பாலும் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு 4 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் மலையம் பாளையத்தை அடுத்த கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்க செய்தார்.
அப்போது அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் விழுந்தது. பொருட்களும் சிதறி கிடந்தன.
சம்பவ இடத்துக்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.
இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று 2-வது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.