search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulation market"

    • விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
    • நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று கொப்பரைகளை கொள்முதல் செய்கின்றனா்.இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 10 விவசாயிகள் 2,071 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.1.62 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையாயின. இத்தகவலை காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமன் தெரிவித்துள்ளாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அருகிலுள்ள கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல்ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,600 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனையானது.

    • ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா்.
    • நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ. 7,450 வரையில் ஏலம் போனது.

    அவினாசி :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,450 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    • உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 1987-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பிரிவு 8 (1). 1991-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) விதிகள் பிரிவு 24,25,27-ன் படி திருப்பூர் விற்பனைக்குழுவின் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை விளைபொருட்களை அடிப்படையாக கொண்டு காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உரிமம் பெற்று இயங்கிவரும் நிறுவனங்கள் உரிமத்தை புதிப்பிக்காமலும், வணிகம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் மாதாந்திர கணக்கறிக்கையாக சமர்பிக்காமலும், விற்பனைக்கூடத்திற்கு செலுத்த வேண்டிய சந்தைக்கட்டணம் செலுத்தாமலும் உள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே இம்மாத இறுதிக்குள் (நாளைக்குள்) உரிமம் பெறாத நிறுவனங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம், உரிமம் பெற்று புதிப்பிக்காத நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
    • குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.

    தாராபுரம் :

    தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.

    அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

    • 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.6, 850 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது.

    சேவூா் :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

    ×