search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Religious people"

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    ×