என் மலர்
நீங்கள் தேடியது "removel"
கும்மிடிப்பூண்டி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் இறால் பண்ணை நடத்தி வந்தனர். அதனை தாசில்தார் தலைமையில் ஆன அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மெதிப்பாளையம் ஊராட்சியில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இறால் பண்ணைகளை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அகற்ற உத்திரவிட்டார்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ் பாபு தலைமையில், மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி, துணை தாசில்தார் தாமோதரன், வருவாய் அதிகாரி ரதி, ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து இயங்கி வந்த இறால் பண்ணைகளை அகற்ற வந்தனர்.
அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் 3 இறால் பண்ணைகளை அகற்றினர். ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.