என் மலர்
முகப்பு » renault duster
நீங்கள் தேடியது "Renault Duster"
ரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #RenaultDuster
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் எஸ்.யு.வி. காரினை 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்த கார் குறைந்தளவு அப்டேட்களை பெற்றிக்கிறது. இந்நிலையில், ரெனால்ட் தனது டஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய டஸ்டர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரில் இரண்டு அப்டேட்களில் வெளியிட இருக்கிறது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டும் இரண்டாம் தலைமுறை மாடல் 2020 ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும். இத்துடன் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.
புகைப்படம் நன்றி: Zigwheels
2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களை கொண்டிருக்கிறது.
இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் என இருவித செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
புகைப்படம் நன்றி: Zigwheels
2020 ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய டஸ்டர் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020 டஸ்டர் காரின் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, அதிகளவு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இரண்டாம் தலைமுறை டஸ்டர் கார் புதிய பி0 பிளாட்ஃபார்மில் உருவாகும் என தெரிகிறது. இதே பிளாட்ஃபார்மில் நிசான் கிக்ஸ் மற்றும் கேப்டுர் கார்கள் உருவாகியிருக்கின்றன.
பெட்ரோல் என்ஜின் கொண்ட ரெனால்ட் டஸ்டர் கார் பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறது. எனினும், 2020 மாடலில் தற்போதைய டீசல் என்ஜினிற்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் புளு DCi என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இது இருவிதங்களில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதன் குறைந்த வெர்ஷன் 95 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் திறனும், மற்றொரு வெர்ஷன் 115 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
×
X