search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renewed"

    புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

    குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

    விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சிக்கிம் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் டோக்லாமில் கட்டுமான பணிகளை சீனா மீண்டும் தொடங்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. #China #Doklam
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் பகுதியில் டோக்லாம் எனப்படும் பீடபூமி பகுதி உள்ளது. பூடானுக்கு சொந்தமான அந்த பகுதியை சீனா உரிமை கோரி வருவதுடன், கடந்த ஆண்டு அங்கு சாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டது.

    இந்த சாலையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதப்படுவதால், அந்த பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சீனா தனது படைகளை குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி வைத்தது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.



    இந்த இழுபறி சுமார் 73 நாட்கள் நீடித்தநிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. பின்னர் இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி வாபஸ் பெற்றன. இதனால் அங்கு அமைதி சூழல் ஏற்பட்டது.

    இந்த கட்டுமானப்பணிகளை சீனா மீண்டும் தொடங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவில் இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந் தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து கட்டுமான பணிகளை மறைப்பதற்காக இந்த கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.

    சீனாவின் சாலை கட்டுமானப்பணிகள் குறித்து சமீபத்தில் தகவல் வெளியிட்ட அமெரிக்க பெண் எம்.பி. ஆன் வாக்னர், இந்த விவகாரத்தில் இந்தியாவோ, பூடானோ எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக்கூறினார். தென் சீனக்கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடுவது போல, இமயமலை பகுதியையும் சீனா உரிமை கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. டோக்லாமில் சீனா கட்டுமானப்பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்களை குறைகூறிய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங், அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி ஏற்படுத்தப்பட்ட நிலைமை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறினார்.  #China #Doklam #tamilnews
    கீரனூரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    கீரனூர்:

    திருச்சி மறை மாவட்டம்  கீரனூர் மறை வட்டத்தில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. 

    தமிழக ஆயர் பேரவையின் தலைவரும், மதுரை உயர் மாவட்ட பேராயருமான டாக்டர் அந்தோணி பாப்புசாமி ஆலயத்தை திறந்து வைத்து புனித நீரால் ஆசீர்வதித்தார். அதன்பின் பங்கு மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர். பின்னர் திருப்பலி நடந்தது. 

    நிகழ்ச்சியில் திருச்சிமறை மாவட்ட முதன்மை குரு யுஜின் அடிகளார் மற்றும் பல குருக்கள், கன்னியாஸ்திரியர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை, மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர். 
    ×