என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renuka Singh"

    • இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிருக்கான டி20 பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீராங்கனை சமாரி அட்டபட்டு 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஹர்மன்பிரித் கவூர் 5 இடங்கள் பின் தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதேபோல பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் ரேணுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். 3-வது இடத்தில் தீப்தி சர்மா தொடர்கிறார்.

    • பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    ×