search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repoll"

    • மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.

    தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
    • அங்கு 72 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்கு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து, 47 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் 22-ம் தேதி (நாளை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை வெடித்தது.

    இந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



    அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
    மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் 13 இடங்களில் வருகிற 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுவது பற்றிய விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-



    தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டுபோட வந்த வாக்காளர்களுக்கு கை விரலில் மை வைத்துவிட்டு ஓட்டு போட அனுமதிக்காமல் வெளியே விரட்டியதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டி பட்டியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அது போல கடலூர், பூந்தமல்லியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று இந்த 10 இடங்களிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே 46 இடங்களில் வாக்குப்பதிவின்போது 3 விதமான தவறுகள் நடந்ததாக தெரிய வந்தது.

    1. மாதிரி வாக்குப்பதிவு நடத்தும்போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டு விட்டனர்.

    2. சில தொகுதிகளில் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டுகளை அப்புறப்படுத்தவில்லை.

    3. மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்து இருந்தனர்.

    இதை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருந்தோம். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இந்த 46 இடங்களில் 3 இடங்களில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று மாலை உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மீதமுள்ள 43 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட மாட்டாது. மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஒன்று பாராளுமன்றத்துக்கும் மற்றொன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும்.

    பண்ருட்டி, ஈரோடு ஆகிய 2 இடங்களில் நடைபெறும் மறுவாக்குப்பதிவில் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.

    கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக நாங்கள் தேனிக்கும், ஈரோடுக்கும் அனுப்பி வைக்கவில்லை. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் சொல்லி விட்டுதான் மின்னணு எந்திரங்களையும் விவி பேட் எந்திரங்களையும் அனுப்பி வைத்தோம்.

    தேர்தல் கமி‌ஷனின் அனுமதியின் பேரில்தான் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் நடந்த தவறுக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்போது மறுவாக்குப் பதிவு நடத்துவதுதான் எங்களது முக்கிய பணியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் விவரத்தையும் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த 13 வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி கன்னப்பாளையம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் (பூத் நம்பர் 195) 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 1117 ஓட்டு உள்ளது.

    பூந்தமல்லி தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்ததால் இங்கு 19-ந் தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் 2 ஓட்டு போடுவார்கள். அப்போது நடு விரலில் “மை” வைக்கப்படும்.

    தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளர்கள் தர்மபுரி எம்.பி. தொகுதிக்கு ஒரு ஓட் டும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் பதிவு செய்ய வேண்டும்.

    தர்மபுரி எம்.பி. தொகுதியில் அடங்கிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண்.192 முதல் 195 வரை உள்ள 4 வாக்குச்சாடிகளிலும், டி.அய்யம்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண். 181 மற்றும் 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும், கேத்து ரெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்.183 மற்றும் 186 ஆகிய 2 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.

    இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு வாக்குச்சாவடிகளையும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து வாக்காளர்கள் 2 ஓட்டுகள் போட வேண்டும்.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்கு சாவடி எண். 248ல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

    இந்த ஓட்டு மையத்தில் தேர்தலுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மாதிரி ஓட்டு 50 சேர்ந்து பதிவாகி உள்ளது. இதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பண்ருட்டி திருவதிகை நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச் சாவடியில் கடந்த 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சின்னத்தின் பட்டன் இல்லை என்பதை வாக்காளர் ஒருவர் கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து 210-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கை அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 2-ம் கட்டமாக கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றபோது காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் வாக்குச்சாவடி எண் 10-ல் மாதிரி வாக்குப்பதிவுகளை வாக்குப்பதிவு அதிகாரி நீக்காமல் வாக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகர் வார்டு 10-ல் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  #LokSabhaElections2019 #Repoll


    தமிழகத்தில் மே 19ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மறுவாக்குப்பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த 13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Repoll 
    கர்நாடக மாநில சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்களுக்கு உள்ளான 3 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Repoll #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் எழுந்ததால் பெங்களூருவில் உள்ள ஹெப்பல் தொகுதிக்குட்பட்ட லொட்டேகொல்லஹல்லி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    1444 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குஸ்ட்டாகி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளுக்கு சேர்த்து நாளை தேர்தல் நடைபெறும் என கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்றிரவு அறிவித்துள்ளார்.

    இந்த இரு வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட சுமார் 275 வாக்காளர்கள் தொடர்பாக பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் இங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். #Repoll #KarnatakaAssembly
    ×