search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Representation"

    • இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
    • நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும்

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள 3 வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 71 அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.

    நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும் என்று எதிராபகப்படுகிறது. நீட் முறைகேடு தவிர, அதிகரிக்கும் விலைவாசி, உணவு பற்றாக்குறை, வெப்ப அலையால் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள், நீட் PG தேர்வு ரத்து, UGC NET தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி என்.டிஏ அரசை வலியுறுத்தும் என்று தெரிகிறது.

     

     

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சென்றமுறையை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இன்று [ஜூன் 24] தொடங்கியுள்ள 18 வது பாராளுன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×