search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Request Petition"

    • நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்
    • மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.

    காங்கயம்:

    ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்க வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை காங்கயத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மேயரிடம் காங்கிரசார் மனு அளித்தனர்
    • சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன

    திருச்சி:

    திருச்சியில் புதை வடிகால் (பாதாள சாக்கடை) திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்டு சீர் செய்யப்படாத சாலைகளை உடனை சீரமைக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சார்லஸ், மேயருக்கு அளித்துள்ள கோரிக்கை ம னு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    திருச்சி, மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக புதை வடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்த நிறுவனத்தினர் சரியாக மூடாததால் பல இடங்களில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பள்ளம் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

    சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன. விரைவில் அவை சரிசெய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வந்தாலும், பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.

    எனவே, இனியாவது போர்க்கால அடிப்படையில், மழை காலம் தொடங்கும் முன்பாக சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மேலும் மாநகராட்சி முழுவதும் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    உடன் மாவட்ட பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், வார்டு தலைவர்கள் மலர் வெங்கடேஷ், காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




    • தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் மரக்கன்று நடும் விழாவில் மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில்தஞ்சை பூக்கார தெரு விளார் சாலையில் உள்ள மாரிக்கு ளம் நந்தவனத்தில்தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், கன்னுக்கிணியாள், மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ், துப்புரவு ஆய்வாளர் மோகனப்பிரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×