என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மாரிக்குளம் நந்தவனத்தில் மரக்கன்று நடும் விழா- மேயர் தொடங்கி வைத்தார்
- பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் மரக்கன்று நடும் விழாவில் மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவ டிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தஞ்சை பூக்கார தெரு விளார் சாலையில் உள்ள மாரிக்கு ளம் நந்தவனத்தில்தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், கன்னுக்கிணியாள், மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ், துப்புரவு ஆய்வாளர் மோகனப்பிரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.