search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Research meeting"

    • சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்ததாவது,

    திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்,

    நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள், அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் காஞ்சி கூட்ரோடு ஆஷா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கே ரமேஷ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்டத் தலைவர் கே.ஆர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    • திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன் , திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கிய 10 திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர்சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்
    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார்.

    ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார்.

    தாட்கோ தலைவர் மதிவாணன் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 76 பேருக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு விஜயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை,

    வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களிடம் துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார்.

    மேலும், அனைத்து துறை சார்ந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    முன்னதாக, ரெங்க சமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதை அவர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.

    இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×