search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resident"

    • பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். தமிழக முதலவர் ஸ்டாலின்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் இந்த தீர்ப்பின்மூலம் உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்களது அரசியல் கொள்கையாக முன்னிறுத்தும் பகுஜன் சமாஜ் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துள்ளது.

    இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, ஒட்டுமொத்தமாக ஒரு குளுவாகவே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். தற்போது அவர்களுக்கிடையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியானதல்ல. சட்டரீதியாகவே இடஒதுக்கீட்டை ஒழிக்க அரசு முயல்கிறது. அதில் தற்போது பாதி வெற்றியும் கண்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    ×