என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "reverse swing"
- உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்ததே பாகிஸ்தான் தான்.
- நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும்.
டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தினாரா என்பதை நடுவர்கள் கண்காணிக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்திருந்தார்.
ஏனெனில் புதிய பந்தை போலவே 15வது ஓவரில் பழைய பந்தை அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாக இன்சமாம் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா, சூரியனுக்கு கீழே பிட்ச் காய்ந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். நாங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் விளையாடவில்லை. இங்கு அனைத்து அணிகளுக்குமே ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. எனவே இந்த அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்துங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த எங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ரோஹித் சர்மாவுக்கு இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் இன்சமாம்-உல்-ஹக் பேசினார். அப்போது, "முதல் விஷயம் ரிவர்ஸ் ஸ்விங் நடந்ததாக ரோகித் ஒப்புக்கொண்டார். எனவே நான் அதை சரியாக கவனித்தது உறுதியாகியுள்ளது. இரண்டாவதாக சூரியனுக்கு கீழே பிட்ச்சில் எப்படி பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதை ரோகித் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகிற்கு அதைச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இது போன்றவற்றை பேசுவது சரியல்ல என்று அவரிடம் சொல்லுங்கள்.
செய்தியாளர் அவரிடம் தவறான கேள்வியை கேட்டுள்ளார். உண்மையில் நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் பரிந்துரைத்தேன். ஏனெனில் 15வது ஓவரிலும் பந்து ரிவர்ஸ் ஸ்விங்கானது. இப்போதும் நடுவர்கள் கண்ணையும் மனதையும் திறந்து வைத்து இந்திய பவுலர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனை. ரோகித் மூளையைப் பற்றி பேசினார். நான் கண்கள் மற்றும் மனதை திறந்து பார்க்குமாறு மட்டுமே சொன்னேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்