search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice confiscation"

    • சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    சிவகிரி:

    கோவை மண்டலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் படி, ஈரோடு சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த ஆம்னிவேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, வி.அருக்கம்பாளையம், போற காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி(34), திருப்பூர் மாவட்டம் முத்தூர் ரோடு அரிமொழி நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேசன் அரிசியை ஒத்தப்பனை, தாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாங்கி 3 ரோடு எம்மாம்பாளையம் பகுதியில் உள்ள நார் மில் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக வாங்கி ஆம்னி வேனில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து.

    இதனையடுத்து ரவி மற்றும் சுரேஷை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்தல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யத்திலிருந்து, காட்பாடி, ஆம் பூர். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல் லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுதுணைபோ லீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக் டர் வனிதா, சப்-இன்ஸ்பெக் டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலை யங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது ஜோலார்பேட் டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டை களில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோரேஷன் அரிசியை பறி முதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1800 கிலோ சிக்கியது
    • பறக்கும் படை தாசில்தாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில், ரெயில்களிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையி லிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது இருக்கையின் அடியிலும், கழிவறை பகுதியிலும் சிறு சிறு மூட்டைகளாக 1800 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

    45 மூட்டைகளில் இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் பறக்கும் படை தாசில்தார் சிவ பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.

    • 25 டன் சிக்கியது
    • சர்க்கரை மூட்டையில் வைத்து கடத்தினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஏரிக்கரை கடந்த ஆண்டு பழுதடைந்து பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது.நீர்வள ஆதாரத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக ஏரிக்கரையை சீர் செய்து இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அணங்காநல்லூர் கிராமத்திலிருந்து குடியாத்தம் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று கூட நகரம் ஏரிக்கரை மீது வந்துள்ளது. பழுதடைந்து இருந்த ஏரிக்கரை பகுதியில் லாரி வந்தது.

    சில நாட்களாக பெய்த மழையினால் ஏரிக்கரை சேரும் சகதியாக இருந்தது. அதில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. லாரியை அதிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அவர்களிடம் கிராம மக்கள் வசாரித்தனர்.

    லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பேசினர். கிராம மக்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கவே அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர்.

    இது குறித்து வருவாய்த்துறைக்கும் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி இராமலிங்கம், சுகந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.

    லாரியில் பிளாஸ்டிக் பைகளால் ஆன மூட்டைகள் இருந்துள்ளது சந்தேகம் கொண்டு அந்த மூட்டைகளை மேலிருந்து பார்க்கும்போது சர்க்கரை மூட்டை காண பிளாஸ்டிக் பை இருந்தது. உள்ளே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக இரண்டு மாற்று லாரிகள் கொண்டுவரப்பட்டு தொழிலாளர்கள் மூலம் சுமார் 25 டன் இருந்து 480 அரிசி மூட்டைகளை மற்ற லாரிகளுக்கு மாற்றினார்கள்.பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    ×