என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ring Road"
- பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும்.
- தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.
சென்னை:
திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.
இரு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவு படுத்தப்படுகிறது.
இதற்காக பாக்கம் புதுக்காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 60 ஆண்டுகள் வயதானவை.
ரோட்டின் இரு பக்கமும் வரிசையாக நின்ற புளி, வேம்பு, ஆலமரங்கள், அரச மரங்கள் நிழல் தரும் மரங்களாக நீண்ட காலமாக நின்றிருந்தன. இந்நிலையில் தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன.
இந்த சாலை விரிவாக்க பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றனர்.
பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும். ரோடு பணிகள் நிறைவடைந்ததும் புதிய மரங்கள் நடும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொடக்குறிச்சி:
சோலாரில் புதிய பஸ் நிலையம் உதயமாவதை அடுத்து ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக செல்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை ரோடு, திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் தொடங்கி சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம், அவல்பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம், முத்தூர் ரோடு லக்காபுரம், கரூர் ரோடு வழியாக கொக்கராயன் பேட்டை மற்றும் திருச்செங்கோடு ரோட்டை இணைக்கும் புறவழிச்சாலை ரிங் ரோடு அமைக்கப்பட்டது.
இதில் ஆனைக்கல்பாளை யத்தில் இருந்து திண்டல் செல்லும் ரோட்டில் ரிங்ரோட்டிற்காக நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பிரச்சனை நீடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதனால் ரிங் ரோட்டில் இணைப்பு சாலை ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணிகளை முடித்து இணை க்கப்படாத சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் இணைத்து போக்குவரத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்லாமல் திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறது.
அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாகவும் சென்று வருகிறது.
மேலும் ஈரோடு மாவட்டம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து வானங்கள் பெரும்பாலும் ரிங் ரோடு வழியாக சென்று வருகிறது.
இந்நிலையில் ரிங் ரோடு அமைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலையை சீரமைக்கவும், மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி யும் நடைபெற்று வருவதால் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.
அப்போது ரிங் ரோடு வழியாக அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதாலும், கரூர் ரோட்டில் இருந்து முத்தூர் ரோட்டில் உள்ள லக்காபுரம் ரிங் ரோடு வரை உள்ள சாலை இரு வழிச்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து ரிங் ரோட்டில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி செய்ய முடிவு செய்து, அதன்படி நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இதற்காக கரூர் சாலை யிலிருந்து சாலையின் இரு புறமும் அகலப்படுத்து வதற்காக ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தி தற்போது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலையின் இரு புறமும் எதிரெதிரே வரும் வாக னங்கள் முந்தி செல்ல முடியாதபடி இருந்த சாலையை கணக்கில் எடுத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்கனவே லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்த ஆனைக்கல்பாளை யம் ரிங் ரோடு வரை 3 வழி சாலையாக உள்ளது. அதே போல் திண்டல் ரிங் ரோட்டில் இருந்து சென்னி மலை ரோடு வரை இருவழிச் சாலையாக உள்ளது.
லக்காபுரம் ரிங் ரோடு பணிகள் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறை வடைந்த பின்னர் லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து திண்டல் ரிங்ரோடு வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டத்தில் தீர்மானம்
- ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க கோட்ட மாநாடு நடந்தது
திருப்பத்தூர்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வு ஊதியர்கள் சங்க கோட்ட மாநாடு திருப்பத்தூர் மாவட்ட மாநாடு திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடில் உள்ள அரிமாசங்ககட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார், அனைவரையும் வாணியம்பாடி கோட்டத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார், மாநிலதுணைத்தலைவர் இரா. சுப்பிரமணியம் தொடக்க உரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, மாவட்டச் செயலாளர் சி.ஏ.பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் கு செல்வராஜ் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) க.அரிகரன், உதவி இயக்குனர் (தணிகை) மு.பிச்சாண்டி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள், கோடடநிர்வாகிகள், உட்பட கோட்டம் முழுவதிலிருந்து ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள்.
இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபால் நன்றி கூறினார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தபோது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களும் அதே அகவிலைப்படி 3 சதவீதம் ஜனவரி 22 முதல் உயர்த்தி தர வேண்டும்.
ரிங் ரோடு
திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது உடனடியாக ரிங் ரோடு அமைத்து தர வேண்டும், ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டுத் தொகை ரூ497 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
பழைய தொகை ரூ .350 மட்டும் பிடிக்க வேண்டும், ஓய்வூதியர்களை குறை தீர்க்கும் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்