search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "River Sarayu"

    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள்.
    • அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 25,12,585 லட்சம் விளக்குகளை அதிக அளவில் காட்சிப்படுத்தியதன் மூலம் சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியில் சாதனை படைத்துள்ளது. 

    இதேபோல், ஒரே நேரத்தில் அதிக மக்கள் விளக்குகளை ஆரத்தி எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், இம்முறை இரண்டு கின்னஸ் சாதனைகளை உ.பி தீபத்திருவிழா படைத்துள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும், லேசர் ஒளி மூலம் ராம் - லீலா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகமும் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக கடந்த 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் குறிப்பிட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #JammuKashmir #Sarayu
    ஸ்ரீநகர்:

    வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டங்கள் வெகுவேகமாக அதிகரித்து வருகின்றன.

    உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கிலான ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம்  ரஜோரி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #JammuKashmir #Sarayu

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிட்ட அளவை தாண்டி சரயு நதி பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Sarayu #Flood
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சரயு நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அயோத்யாவில் சரயு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் தண்ணீர்ின் அளவு குறிப்பிட்ட அளவைத் தாண்டிசென்று கொண்டிருக்கிறது. சரயு ஆற்றில் சேமிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் 93 அடியை தொட்டுள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகரிதத்துள்ளது.



    இதனால் சரயு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். #Sarayu #Flood

    ×