search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Safety Awareness"

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ். வரவேற்புரை யாற்றினார். முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்நது நெல்லை உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு அலகு) சசிகலா சாலை விழிப்புணர்வு பற்றியும், சாலை விபத்தை தடுப்பது மற்றும் சாலை விதிகள் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்து கூறினார். நிறைவாக நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, நன்றியுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், வள்ளியூர் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் முத்து முருகன், நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா, நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் செல்வன், வள்ளியூர் கோட்ட சாலை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வை கல்லூரி அகத் தர மதீப்பட்டு குழு ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 , 37 மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
    • நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    வாகன பேரணி

    நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியினை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திர குமார் இன்று புதிய பஸ் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இப்பேரணி யானது குலவணி கர்புரம், மேலப்பா ளையம் சிக்னல் வழியாக என்.ஜி.ஓ. காலனி வந்தடைந்தது. தொடர்ந்து அருகிலுள்ள ஒரு மகாலில் ஓட்டுனர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வாகன விற்பனை யாளர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஹெல்மெட் கட்டாயம்

    பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்புக்கு 80 சதவீதம் காரணம் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டு பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்தி ருப்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது, இந்திய தர நிர்ணய சான்று அல்லாத சாதாரண ஹெல்மெட்டுகளை பயன்படுத்த கூடாது என்று கூறி விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தொழில்நுட்ப பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜ சேகரன், பெருமாள், மாவட்ட ஓட்டுனர் சங்கத்தலைவர் காளிதாஸ், நெடுஞ்சா லைத்துறை பொறியாளர் திருசெல்வன், லெட்சு மணன் உட்பட அரசு அலுவலர்கள், போக்கு வரத்துறை அலுவலர்கள், ஓட்டுனர்கள், பயிற்றுநர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கினால் உயிரிழப்புக்களைத் தடுக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுப் பிரசார தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கக்கூடாது என்பதாகும். தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கினால் உயிரிழப்புக்களைத் தடுக்கலாம். ஆகவே, பெற்றோா் தங்களது பிள்ளைகளை தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த குறும்படம் மற்றும் சுவரொட்டிகளை வெளியிட்டதுடன், மாணவா்களுக்கு தலைக்கவசங்களையும் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊட்டி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மணமேல்குடி:

    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் முடி வடைந்தது.

    ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா கண்காட்சியை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமைத்திருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.

    இதுபற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் உயர்ந்து விட்டால் போதாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர்கள் சாலையில் சாகசம் செய்யாமல் சாலை விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டமாக ஆக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசியதாவது:-

    மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த கண்காட்சியை சிறப்பாக அமைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனம் சஞ்சலமாக உள்ள போதும், சந்தோஷமாக உள்ள போதும் வாகனம் ஓட்டக்கூடாது. அற்புதமான பிறவி மனித பிறவி. கொலை குற்றம் என்பது படுபாதக செயல். ஆனால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி விபத்தில் மரணம் அடைவது என்பது பெரிய இழப்பாகும். விபத்தினால் ஒருவர் மரணம் அடையும் போது அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.

    சாலை விதிகளை கடைப் பிடிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளாகிய நீங்கள் சொன்னால் உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் முன் னுதாரணமாக இருக்க வேண்டும். உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியவந்தால் சாலை விபத்தில் உயிரிழப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) முக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு(ஆயுதப்படை) சரவணன், தர்மபுரி சமூக சேவகர் முரளி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலுக்கு இணங்க ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் 4 ரோடு, கடைவீதி, விருத்தாசலம் ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்சில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. வேகத்தை குறைத்து, சாலை விதிகளை மதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் போலீசார் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.  
    திண்டிவனத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். #RoadSafetyAwareness
    திண்டிவனம்:

    திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திண்டிவனத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, கார்த்திகேயன், விஜி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாம்பெனட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திண்டிவனம் உட்கோட்ட போலீசார், ஊர்க்காவல்படையினர், போலீஸ் நண்பர்கள் குழு, இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த பேரணியானது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரெயில்வே மேம்பாலம், நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன், நடராஜன், கல்யாணராமன், தட்சிணாமூர்த்தி மற்றும் இருசக்கர பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் பிரபு, துணை தலைவர் குமார், ஆலோசகர் பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×