search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

    நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ். வரவேற்புரை யாற்றினார். முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்நது நெல்லை உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு அலகு) சசிகலா சாலை விழிப்புணர்வு பற்றியும், சாலை விபத்தை தடுப்பது மற்றும் சாலை விதிகள் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்து கூறினார். நிறைவாக நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, நன்றியுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், வள்ளியூர் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் முத்து முருகன், நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா, நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் செல்வன், வள்ளியூர் கோட்ட சாலை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வை கல்லூரி அகத் தர மதீப்பட்டு குழு ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 , 37 மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×