search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road widening works"

    • பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
    • தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    காங்கயம்:

    மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடை பெறுவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில் பள்ளம் பறித்து சாலை விரிவாக்க பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடை பெறுவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் பகுதி முக்கிய நால்ரோடு சந்திப்பு சாலையாக இருப்பதாலும், ஈரோடு- காங்கேயம் பிரதான சாலையாக உள்ளது.

    மேலும் கஸ்பா பேட்டை பஸ் நிறுத்தம் அருகிலேயே பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, வங்கிகள், அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, சிவன் கோவில், பெருமாள் கோவில், மகா முனிஸ்வரர் கோவில் இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் போக்குவரத்து இடையூறு அதிக அளவில் உள்ளது.

    தவிர சாலைகளை கடந்து செல்ல பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி ன்றனர். விபத்து அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.

    போக்குவரத்து இடையூறு தவிர்க்கவும், விபத்து அபாயம் இல்லாமல் இருக்கவும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • லால்குடி உட் கோட்ட அளவில் 12.60 கி.மீ. நீளத்திற்கு 10.82 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை திட்டத்தில் 13.20 கி.மீ. நீளத்திற்கு 8.92 கோடியிலும் பணிகள் நடை பெற்று வருகிறது.
    • துறையூர் உட்கோட்ட அளவில் 0.525 கி.மீ. நீளத்திற்கு 2.37 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை 9.40 கி,மீ நீளத்திற்கு 12.46 கோடியிலும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்டப் பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறும் போது:-

    திருச்சி உட்கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் மாநில நெடுஞ்சாலை 11.76 கி.மீ. நீளத்திற்கு 90.06 கோடி மதிப்பிலும், இதர சாலைகள் 12.80 கி.மீ. நீளத்திற்கு 44.90 கோடி மதிப்பிலும், மாவட்ட இதர சாலைகள் 15.80கி.மீ. நீளத்திற்கு 18.77 கோடியிலும், சாலை ஓடுதளத்தை அகலப்படுத்துதல், வடிகாடில் கட்டுதல், சாலை மேம்பாடு செய்தல், தரைமட்ட தாம் போக்கிகளை சிறு பாலங்களாக திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    லால்குடி உட் கோட்ட அளவில் 12.60 கி.மீ. நீளத்திற்கு 10.82 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை திட்டத்தில் 13.20 கி.மீ. நீளத்திற்கு 8.92 கோடியிலும், மாவட்ட இதர சாலை 24.40 கி..மீ நீளத்திற்கு 27.38 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் முசிறி உட்கோட்ட பகுதிக்குட்பட்ட மாவட்ட முக்கிய சாலை 7.கீ.மீ நீளத்திற்கு 12.75 கோடியிலும், மாவட்ட இதர சாலைகள் 37.20 கி.மீ. நீளத்திற்கு 20.02 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    துறையூர் உட்கோட்ட அளவில் 0.525 கி.மீ. நீளத்திற்கு 2.37 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை 9.40 கி,மீ நீளத்திற்கு 12.46 கோடியிலும், மாவட்ட இதர சாலை 11.00 கி.மீ. நீளத்திற்கு 10.61 கோடியிலும், கரும்பு அபிவிருத்தி சாலை 5.00 கி.மீ நீளத்திற்கு 3.26 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மணப்பாறை உட்கோட்ட அளவில் மாவட்ட முக்கிய சாலை 8 கி.மீ நீளத்திற்கு 3.47 கோடியிலும், மாவட்ட இர சாலை 21.20 கி.மீ. நீளத்திற்கு 14.21 கோடியிலும் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட மாநில தேசிய நெடுஞ்சாலையின் உட்கோட்ட பிரிவுகளில் மொத்தம் 190 கி.மீ. தூரத்திற்கான சாலை மேம்பாடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு என்று ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இரவும், பகலுமாக நடைபெற்றுவரும் இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு திட்டம்
    • சென்னை கோட்ட பொறியாளர் ஆய்வு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், அருகே மழையூர்- தெள்ளார், சாலையில் உள்ளகுன்னகம்பூண்டி - வெடால், கூட்ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு, மற்றும் விபத்து தடுப்பு, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.

    இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியால் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நடுக்கோட்டை கிராமத்தில் பொதுநிதியில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சுகுழாய் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலமாக நடுக்கோட்டை ஊராட்சி கீரியகவுண்டபட்டி காலனியில் இருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் கழிவு நீர் இந்த புதிய உறிஞ்சுகுழாயில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நடுக்கோட்டை மைக்குடி அருகே கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலக்கோட்டையில் இருந்து பாரபத்தி வரையில் செல்லும் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டி னை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது 5 மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோடு 7 மீட்டராக அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி யுள்ளனர். இதன் மூலமாக வாகன போக்குவரத்து மைக்குடி விலக்கில் இருந்து கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோ ட்டை விலக்கு வரையில் சாலை பணிகள் தொடங்கி யுள்ளன.

    முதற்கட்டமாக தற்போது கீழக்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இந்த பணி அடுத்துள்ள நடுக்கோட்டை பஞ்சாயத்து எல்லையில் நடைபெறும். அப்போது புதியதாக நடுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் அருகே சாலைபணி நடைபெறும் உள்ளதால் உறிஞ்சுகுழாய் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுநிதி ரூ. 1 ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர் சுந்தரவடிவே லுவிடம் கேட்ட போது சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என நாங்கள் ஏற்கனவே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நடுக்கோட்டை ஊராட்சியில் தகவல் கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சாலை அகலப்படுத்தும் இடத்தில் உறிஞ்சுகுழாய் அமைத்துள்ளனர். அதன்மீது தான் சாலை அகலப்படுத்தும் பணிகள் செல்லும் என்றார்.

    கீழக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில் இரண்டு துறை அதிகாரிகளும் முதலிலேயே கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்கி இருக்கலாம். தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    ×