search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rock pits"

    • விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர்.
    • விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாறைக்கு ழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கறுகையில், திருப்பூரை சுற்றியுள்ள வீரபாண்டி, வெள்ளியங்காடு, போயம்பாளையம், சுகுமார் நகர், பாரப்பாளையம், பாப்பநாயக்க ன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் இந்த பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர். குளிர்ச்சி யான நீரைக் கண்டதும் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களும் பாறைக்குழிகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள். பாறை குழிகளுக்கு துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சில நேரங்களில் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகின்றனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடை களும் தாகம் தணிக்கச் சென்று அதில் விழுந்து சிக்கிக் கொள்கின்றன. திருப்பூரை சுற்றியுள்ள பாறைக்குழி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாறை குழிகளு க்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். அல்லது முழுமையாக குழிகளை மூடி விட நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மேலும் பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகராட்சி பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அளவிலான பாறைக்குழிகள் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழையால் தண்ணீர் தேங்குவதால் நீரோடை போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று குளிக்கிறார்கள். எளிதாக பாறைக்குழிகளில் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாறைக்குழிகளை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பாறைக்குழிகள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அது பற்றி மேயரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    ×