search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rockstar Games"

    • ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது.
    • ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெறகிறது.

    ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜி.டி.ஏ. 6 (GTA 6) கேமின் டிரைலர் டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த கேம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில், ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம் ஹௌசர், ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    2013-ம் ஆண்டு ஜி.டி.ஏ. 5 வெளியிடப்பட்டது. இதுவரை ஜி.டி.ஏ. 5 கேம் 190 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில் 5 மில்லியன் யூனிட்கள் 2023 ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனையாகி இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏற்ப தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஜி.டி.ஏ. கேமின் ஆன்லைன் பிரிவுக்கு இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது.

    "டிசம்பர் மாத துவக்கத்தில், நாங்கள் அடுத்த கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ கேமிற்கான முதல் டிரைலரை வெளியிட இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற அனுபவத்தை பல ஆண்டுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்று சாம் ஹௌசர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது. மேலும் இந்த கேம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கேமிங் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், இந்த கேமிற்கான டிரைலர் வெளியீட்டு தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×