search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rotary Society"

    • வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனையடுத்து ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.வெங்கடசுப்பு, செயலாளராக ஆர்.அருண்குமார், பொருளாளராக கே. ரத்தினசாமி என்கிற மணிவேல், துணைத்தலைவராக வீ.சி.சுவாமிநாதன், நிர்வாக செயலாளராக ராசி கே.ஆர் சின்னசாமி மற்றும் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

    பதவியேற்பின் போது தலைவர் ஆர்.வெங்கடசுப்பு கூறியதாவது:- கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் பகுதியில் கண் சிகிச்சை முகாம், பொது நல மருத்துவ முகாம், செயற்கை கால் வழங்கும் முகாம் மற்றும் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்சக்தி என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான மின்மயானத்தை ரோட்டரி சார்பில் நவீனப்படுத்தி செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி .கோபாலகிருஷ்ணன், என் .மணிமாறன், எம்.பிரேம்குமார், டி.கே. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் சங்க முன்னாள் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எஸ்.ரகுநாதன், செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஏ.மகாதேவன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.

    ×