என் மலர்
நீங்கள் தேடியது "Royal Challengers Bengaluru"
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை அதனை மாற்றியுள்ளது.
- ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகிறது.
பெங்களூரு:
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 மாற்றங்களை கொண்டுள்ளது. கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என்ற பெயரில் விளையாடவுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் பெயரை மாற்றி இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜெர்சியின் வண்ணத்தையும் மாற்றியுள்ளது. ரெட் மற்றும் கருப்பு கலரில் இருந்த ஜெர்சியை தற்போது நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது. கடைசியா ஆர்சிபி அணியின் லோகோவை மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரிசிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
- பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.
சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 5-ல் தோல்வியடைந்துள்ளது.
- சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி 2-ல் தோல்வியடைந்துள்ளது.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 5-ல் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி 2-ல் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும்.
- வெற்றி உத்வேகத்துடன் ஆதிக்கம் செலுத்த ஐதராபாத் எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) அடைந்துள்ளது. முதல் 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து எழுச்சி கண்டுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள்) என்ற சாதனையை படைத்த ஐதராபாத் அணி தொடர்ந்து ரன்வேட்டையில் மிரட்டுகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் சேர்த்து வியக்க வைத்துள்ள ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 324 ரன்), ஹென்ரிச் கிளாசென் (268), அபிஷேக் ஷர்மா (257) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே வலுசேர்க்கிறார்கள்.
பெங்களூரு அணி இந்த சீசனிலும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தனது 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 223 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.
இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (239), ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு தான் தொடர்ந்து சொதப்புகிறது. அதிகபட்சமாக யாஷ் தயாள் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முகமது சிராஜ், கேமரூன் கிரீன், கரண் ஷர்மா உள்ளிட்ட பவுலர்களின் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. கடைசி 2 ஆட்டங்களில் அந்த அணியினர் 220 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எனவே பெங்களூரு பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியம்.
பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற மனநிலையில் உள்ள பெங்களூரு அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில், வெற்றி உத்வேகத்துடன் ஆதிக்கம் செலுத்த ஐதராபாத் எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.
மொத்தத்தில், பேட்டிங்கில் ருத்ரதாண்டவமாடும் ஐதராபாத்தின் சவாலை பெங்களூரு சமாளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் 13 ஆட்டத்திலும், பெங்களூரு 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இவ்விரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் மார்கண்டே அல்லது வாஷிங்டன் சுந்தர்.
பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் அல்லது அனுஜ் ராவத், விஜய்குமார் வைஷாக் அல்லது கரண் ஷர்மா, ரீஸ் டாப்லே, லோக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆர்சிபி அணியில் படித்தார் 20 பந்தில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. டுபிளிசிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 6 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து கோலி- பட்டிதார் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய பட்டிதார் 20 பந்தில் 50 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மந்தமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கேமரூன் க்ரீன்- தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
- அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.
அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.
அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.
2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
- சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
- ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோலி- பட்டிதாரின் அரை சதம் மற்றும் கேமரூன் க்ரீனின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதி கட்டத்தில் வந்த பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகளை விளாசி 13 ரன்னில் வெளியேறினார். இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார்.
- ஸ்வப்னில் சிங், சிராஜ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய குஜராத் 200 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணி சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் 12 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலியுடன் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மோகித் சர்மா வீசிய 15வது ஓவரில் வில் ஜாக்ஸ் 29 ரன்கள் குவித்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் நடப்பு தொடரில் பெங்களூரு அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
தர்மசாலா:
17-வது ஐ.பி.எல். தொடரின் இன்று தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.
பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.