என் மலர்
நீங்கள் தேடியது "RS"
- சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அமளி நீடித்தது. இதேபோல் காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned