search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 2000 notes"

    • சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

    மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • 93 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    • கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது.

    2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கிக்கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், பலர் இன்னும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும் 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
    • குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று நிருப ர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-

    தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக மாக இருப்பதாகவும், நீங்கள் ரூ 85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    மேலும் அவரை நேரில் சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.

    இதனை நம்பியே பிரகாஷ் கடந்த 10-ந்தேதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணத்துடன் பொள்ளா ச்சிக்கு சென்றார். அப்போ துதான் இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.

    இது தொடர்பாக குற்ற வாளிகளை பிடிக்க வால்பாறை சரக டி.எஸ்.பி. கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.

    தனிப்படை போலீசார் குற்றவாளிகள் பயன்ப டுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரி த்தனர்.

    விசாரணையில் இந்த கும்பல் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீ சார் அங்கு விரைந்து சென்று பெண் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம், 2 கார்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    சம்பவம் நடை பெற்ற 12 மணி நேரத்தில் குற்ற வாளிகள் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

    எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்து ள்ளது. வங்கியிலேயே பணத்தை மாற்ற வேண்டும். எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமார வேண்டாம்.

    இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரியிடம் கேட்டுள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.தொடர்ந்து குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீ சாரை பாராட்டி பாராட்டு சான்றி தழ் மற்றும் ஊக்க தொகையையும் வழங்கினார்.

    • 2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது.
    • 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிகை வெகுவாக குறைந்து விட்டது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் பின்வருமாறு:-

    31.3.2020-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது.

    2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.

    நாடுமுழுவதும் கைப்பற்றப்பட்ட ரூ.2,000 கள்ளநோட்டுகள் 2016 ல் 2,272 ஆக இருந்து 2017 ல் 74,898-ஆக அதிகரித்தது. அதுவே2020 ல் 2.44 லட்சம் என உச்சம் அடைந்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 31.3.2020 ல் 22.6 சதவீதமாக இருந்து 31.3.2021 ல் 13.8 சதவீதமாக சரிந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 31.3.2020 ல் 274 கோடியாக இருந்து 31.3.2021 ல் 245 கோடியாக சரிந்தது. மேலும் சரிந்து 31.3.2022ல் 214 கோடியாக உள்ளது.

    புழக்கத்தில் உள்ள அனைத்து நோட்டுகளின் மொத்த மதிப்பு 31.3.2021 ல் ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்து 31.3.2022 ல் ரூ.31.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளதோடு புழக்கத்தில் உள்ள நோட்டுகளும் படிப்படியாக குறைந்து வருவதால் மதிப்பிழப்பை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
    புதுடெல்லி:

    2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

    எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

    அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

    2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
    ×