search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 25 Lakh"

    இந்தியாவில் எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. #MLA #AverageIncome
    கொல்கத்தா:

    இந்தியாவில் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு வருமானம் தொடர்பாக ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு’ மற்றும் ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மொத்தம் உள்ள 4086 எம்.எல்.ஏ.க்களில் 3145 பேர் இந்த பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக, இந்த எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ளன.

    அதன்படி, இந்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக தென் பிராந்தியத்தை சேர்ந்த 711 எம்.எல்.ஏ.க்களின் சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்.எல்.ஏ.க்களின் வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் இருக்கிறது.

    மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கர்நாடகாவின் 203 எம்.எல்.ஏ.க்கள் சராசரியாக ரூ.1.11 கோடி சம்பாதிக்கின்றனர். குறைந்தபட்சமாக சத்தீஷ்காரின் 63 எம்.எல்.ஏ.க்கள் ரூ.5.4 லட்சம் பெறுகிறார்கள்.

    இந்த எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1052 (33 சதவீதம்) பேர் 5 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதியை கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது. பட்டதாரி மற்றும் கூடுதல் தகுதியை பெற்றிருக்கும் 1997 (63 சதவீதம்) எம்.எல்.ஏ.க்கள், ரூ.20.87 லட்சம் பெறுகின்றனர்.

    வெறும் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது. #MLA #AverageIncome
    சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள ஓட்டலில் தவறவிட்ட ரூ.25 லட்சத்தை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    வில்லிவாக்கம்:

    அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு சென்றனர்.

    இரவு 10.30 மணியளவில் ஊழியர் ரவி மேஜைகளை கண்காணித்த போது மேஜையில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்த போது அதற்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக அந்த பையை மானேஜர் பாலுவிடம் ஒப்படைத்தார். இருவரும் ஓட்டல் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் இன்று காலையில் அந்த பணப்பையை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்ததும் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். அவருக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். ரவியின் சொந்த ஊர் செஞ்சி.

    பணத்துக்கு உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை. உரிமை கோரி வருபவர்களிடம் விசாரணை நடத்தி உரியவரிடம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×