என் மலர்
நீங்கள் தேடியது "rs shivaji"
- முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
- இவர் பேசிய வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.
80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
ஆர்.எஸ்.சிவாஜி
இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கார்கி' திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது.
இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.